பாட்டியாக இருந்து  பியூட்டியாக மாறும்  சமந்தா: ஓ பேபி ட்ரைலர் உள்ளே

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 01:01 pm
oh-baby-theatrical-trailer

BV நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா  "ஓ பேபி" என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தை சுனிதா டாடி தயாரித்துள்ளார். மேலும் "ஓ பேபி" திரைப்படம் , 2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது. 

இத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாகா சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரிலீஸுக்கு தயாராகி வரும் `ஓ பேபி' படத்திலிருந்து ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  70 வயதான பாட்டி லட்சுமி 25 வயது சமந்தாவாக மாறிய பின் நடக்கும் சுவராஸ்யமான நிகழ்வுகளும், பாசப்போராட்டங்களும் இந்த படத்தின் கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தரப்பில் தொடர்பில் உள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

newstm.in
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close