கொள்ளையடிக்கும் நாயகன், துப்பறியும் நாயகி : அசுரகுரு ட்ரைலர்!

  கண்மணி   | Last Modified : 07 Jul, 2019 01:15 pm
asuraguru-tamil-movie-official-trailer

அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கத்தில், விக்ரம் பிரபு அதிரடி நாயகனாக நடித்துள்ள  அசுர குரு திரைப்படத்தில் மகிமா நம்பியார் ஹீரோயினாகவும், இவர்களுடன் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர்  ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

இந்நிலையில்  படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரின் படி  சாதுர்யமாக கொள்ளையில் ஈடுபடும் நாயகனை கண்டுபிடிக்க திணறும் போலீஸார், இந்த வழக்கை துப்பறிவாளராக இருக்கும் நாயகியிடம் ஒப்படைக்க, அதன் பின்னர் நாயகன், நாயகியிடம் பிடிபடுவாரா? என்பதை  மையமாக கொண்டு படத்தின் கதை இருக்கும் என்பது தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close