மனிதனில் எத்தனை வகை? திருமாலின் கேள்விக்கு கருடன் பதில்...

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கருத பகவான் மகாவிஷ்ணுவுடன் உரையாடிய பொழுதில் திருமால் கருடனிடம் கேள்வி ஒன்றை கேட்டார். "உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா...?" என்பதே கேள்வி. கேள்வி காதில் விழுந்த வேகத்தில் பதில் தந்தார் கருடன்."மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு". உடனே மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மனிதர்கள் தானா ?" என்றார். "மகா பிரபு உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை. ஆனாலும் என்னிடம் கேட்பது ஏன்? தெரியவில்லை. தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்று பவ்யமாக பதிலளித்தார் கருடன். "சரி. யார் அந்த மூன்று விதமான மனிதர்கள்?" என்று கேள்வி கேட்டார் மகாவிஷ்ணு. கருடனோ பயபக்தியுடன் "பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.இது முதல் வகையினர். பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர். இவர்கள் இரண்டாம் வகையினர். கணவனும் மனைவியும் போல் உள்ளனர் மூன்றாம் வகையினர்" என பதில் தந்தார் கருடன். தனது நாடகத்தை தொடர்ந்த பகவான் மகாவிஷ்ணு, "எதுவும் புரியவில்லை இன்னும் விளக்கமாக சொல்" என கருடனை மேலும் பேசத் தூண்டினார். "முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும்: பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிச் செல்கிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலைப் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா என்பதும் தெரியாது, சிறகுகள் வளர பறக்க முயற்சி செய்யும். சில கீழே விழுந்து மடியும், தப்பிய பறவை வாழ்ந்து மடியும். மனிதர்களில் இந்த வகையினர் ஏழ்மையுடன் போராடுபவர்கள், கூலி தொழில் புரிபவர்கள், வெந்ததை தின்று விதி வந்தால் சாகும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களில் சிலருக்கு இறைவனையும் தெரியாது. இரண்டாவது வகை பசுவும் கன்றும் போன்றவர்கள். பசுவும் கன்றும் அருகருகே இடைவெளி விட்டு கட்டியிருப்பார்கள். கன்று பசிக்கும் போது தாயைப்பார்த்து பாசத்துடன் சத்தமிடும். தாய்ப்பசுக்கு தனது கன்றுக்கு பால் தரத்துடிக்கும். கன்றும் பசியில் தவித்தாலும் முழம் கயிறு அதை தடுக்கும். கயிற்றில் இருந்து விடுபட போராடும் கன்று. ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். இது போல வகையில் தவிக்கும் மனித வகையினருக்கு இறைவனைத் தெரியும் அவரை அடைந்தால் தான் நிலைத்த நிம்மதி என்பதும் புரியும். ஆனாலும் பாசம் என்ற முழ நீள கயிறை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு அருகாமையில் இருந்து பார்த்து பார்த்து தவிக்கிறார்கள். மூன்றாவது வகையினர் நிலைமை இன்னும் வித்தியாசமானது. கணவன் மனைவி உறவைப் போன்றவர்கள். அறிமுகமில்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆண், முதலில் சற்று தயங்கியும் தள்ளியும் நிற்பான். ஆனால் அந்த பெண்னோ கணவன் மீதான காதலில் தன்னை அவனுக்கு ஏற்றார்போல மாற்றிக் கொள்வாள். இந்த மனைவியின் அன்பை அனுபவித்த கணவன் தன் மனைவியிடம் முழுமையாகவே தன்னை கொடுத்து விடுகிறான். மனைவியின் தாசனாகவே மாறிவிட்ட கணவன் ஆகிவிட்ட கணவனை போலவே இந்த வகை மனிதர்கள், ஆரம்பத்தில் இறைவனை சரியாக உணராமல் ஒதுங்கி இருப்பார்கள். இறைவனின் பெருங்கருணையை புரிந்து கொண்டபிறகு இறைவனின் தீவிர அடியவர்களாக தங்களை மாற்றிக் கொள்வர்" இப்படி மொத்தம் மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர் என்றார் கருடன் மகாவிஷ்னுவிடம். இந்த தெளிவான விளக்கத்தை கேட்டு மகிழ்ந்த மகா விஷ்ணு மனம் குளிர்ந்து கருடனை தன்னுள் ஈர்த்துக் கொண்டார். பக்தியும் தெளிவும் பகவான் இடத்திற்கு நம்மை நிச்சயம் இட்டுச் செல்லும். சுபமே விளையும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close