கலிக்கம்ப நாயனார்-63 நாயன்மார்கள்

  தனலக்ஷ்மி   | Last Modified : 11 Jun, 2019 11:42 pm
kalikkamba-naayanaar

கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பெண்ணாகடம் என்னும் பகுதியில் வணிகர் குலத்தில் அவதரித்தவர் கலிக்கம்பர். தேவகன்னியர் என்றழைக் கப்படும் பெண்,  ஆ என்று குறிக்கப்படும் காமதேனு பசுவும், கடம் என்று அழைக்கப்பட்ட வெள்ளை யானையும் எம்பெருமானை வழிபட்டதால் இத்தலம் பெண்+ஆ+கடம் சேர்த்து பெண்ணாகடம் என்றழைக்கப்பட்டது.

அந்நகரில் உள்ள தூங்கானை மடம் சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் துதித்து வாழ்ந்து வந்தவர் கலிக்கம்பர். அவ ருக்குத் தொண்டு செய்வதோடு அவரை நினைத்து உருகும் அடியாருக்கும் தொண்டு செய்பவர். சிவனை வழிபடும் சிவனடியார்களை வழி படாவிட்டால் சிறிதும் பலனில்லை என்னும் உறுதியை உண்மையாக கொண்டிருந்தார் கலிக்கம்பர்.

சிவனடியார்கள் யாராக இருந்தாலும் எத்தகைய குலத்தைக் கொண்டவராக இருந்தாலும் அவர்கள் சிவனடியார்கள். அவர்களை உபசரிப்பதில் எத்தகைய குறையும் நேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்களே உண்மையான சிவத்தொண்டர்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந் தவர் கலிக்கம்பர்.

தம்மை நாடி வரும் சிவனடியார்களுக்கு வீட்டில் அமுது அளித்து அவர்களுக்கு வேண்டிய பொருளையும் பொன்னையும் அவர்கள் வேண்டுவன வற்றையும் மனமுவந்து அளித்து மகிழ்வோடு வழியனுப்பி வைப்பார்.ஒருமுறை அவரை நாடி சிவனடியார் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு மகிழ்வோடு பாதபூஜை செய்தார் கலிக்கம்பர்.அவரது மனைவி சிவனடியாருக்கு மனையைச் சுத்தமாக்கி அறுசுவை விருந்து படைக்க கணவரு டன் கலயத்தில் நீர் எடுத்து வந்தார்.அமர்ந்திருந்த சிவனடியாரைக் கண்டதும் நொடியில் அவர் முகம் மாறியது. முகத்தில் அருவெறுப்பை உமிழ்ந்தார். ஏனெனில் அந்த தொண்டர் முன்பு கலிக்கம்பரிடம் பணியாற்றியவர் என்பதே.

பணியாளனுக்கு தண்ணீர் வார்க்க தயங்கிய மனைவியின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கலிக்கம்பர் அவரது முகத்தில் தெரிந்த அருவெறுப்பைக் கண்டதும் கோபம்கொண்டு அருகில் இருந்த வாளை எடுத்து வந்து  மனைவியின் கரத்தைப் பற்றி வெட்டினார். இதனால் மயக்கமுற்று சிவனைத் துதித்தப்படி மயங்கி கீழே விழுந்தார் அந்த அம்மையார். நடந்ததைக் கண்டு சிவனடியார் மனம் பதைத்து எழுந்தார். கரங்களை வெட்டியதால் அம்மையாரின் கரங்களிலிருந்து இரத்தம் பெருகி வழிந்தது.

திடீரென்று அந்த இடமே ஒளிவெள்ளமானது. கலிக்கம்பரின் அன்பை உலகுக்கு உணர்த்தவே இத்தகைய நாடகத்தை அரங்கேற்றிய சிவபெருமான் அவர்கள் முன் தோன்றினார். உறக்கத்திலிருந்து எழுந்தது போல் எழுந்து நின்றாள் கலிக்கம்பரின் மனைவி. மூவரும் இறைவனின் பாதம் பணிந்து மனமுருகி நின்றார்கள். எம்பெருமானின் அருளால் இயன்றவரை  தமது மனைவியுடன் இணைந்து சிவத்தொண்டுகள் செய்து இறைவனடி சேர்ந் தார் கலிக்கம்ப நாயனார்.

கலிக்கம்ப நாயனாரின் குருபூஜை தைமாதம் ரேவதி நட்சத்திரத்தில் எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.  


newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close