பொறுமை வெற்றியையும் பொறாமை அழிவையும் கொடுக்கும்

  தனலக்ஷ்மி   | Last Modified : 21 Jun, 2019 06:13 am
porumaiyum-poramaiyum

மனதில் எழும் பொறாமை தீயை ஆரம்பத்திலேயே அடக்கிவிட்டாலே வாழ்க்கை முழுமையடையும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். இல்லையென்றால் அந்த தீ வளர்ந்து நாளடைவில் பெரிய அளவில் தர்மத்தை மீறி அதர்மத்தைச் செய்ய தூண்டும். பொறாமையால் பிறரை அழிக்கவும்  தூண்டி விடும். இதற்கு உதாரணமாக கெளரவர்களையே சொல்லலாம்.

திருதராஷ்டிரனும், பாண்டுவும் அண்ணன் தம்பிகள். திருதராஷ்டிரன் மூத்தவனாக இருந்தாலும், கண் பார்வையற்று இருந்ததால் பாண்டுவே அஸ்தினாபுரத்து மன்னனாக முடிசூட்டப் பெற்று ஆட்சி செய்தான். பாண்டுவுக்கு ஐந்து பிள்ளைகள் இவர்கள் தான் பஞ்சபாண்டவரகள். திருதராஷ் டிரனுக்கு 100 பிள்ளைகள் அவர்கள்  தான் கெளரவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

பஞ்ச பாண்டவர்களும், கெளரவர்களும் சிறுவயதில் ஒன்றாக விளையாடுவார்கள். பாண்டவர்கள் தங்களுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் கெளரவர்கள் அவர்களுடன் அன்பாக பழகினார்கள். சகுனியும், கர்ணனும் கூட நட்பாக பழகினார்கள்.எனினும் அவர்களுக்குப் பிடித்தவர்களுடன் நட்பு பாராட்டினார்கள்.

பொறாமைத் தீயின் ஆரம்பம் இங்குதான் தொடங்கியது. பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் என்னும் தர்மர் எல்லோராலும் பாராட்டப் பெற் றார். தருமர் என்னும் பெயருக்கேற்ப தர்மசீலராக வாழ்ந்தார். அனைவரது பேச்சும், பாராட்டும் எப்போதும் இவரை தொடர்ந்தே இருந்ததால் கெளரவர்களான  துரியோதனின் தம்பி துச்சாதனனுக்கு தர்மரைப் பிடிக்காமல் போயிற்று. அவர் மீது சிறு பொறாமைக்குணம் தலைதூக்கியது.
அவனது பொறாமைக்குணத்தை சிறிது சிறிதாக கெளரவர்கள் அனைவரிடமும் பரவ செய்தான். இவர்களோடு அதிகம் நட்பு பாராட்டிய சகுனி, கர்ணனையும்  விட்டுவைக்கவில்லை. இவர்களும் துரியோதனனிடம் பாண்டவர்கள் மீது பொறாமைத் தீயை வளர்க்க செய்தார்கள்.

நாளடைவில் பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொன்றிலும் தனித்து சிறக்க சிறக்க இவர்களுக்குள் இருந்த பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தர்மரை தொடர்ந்து பீமன் வீரத்துடனும், பலத்துடனும் சிறப்பு பெற்று அனைவராலும் வாயு மைந்தன் என்றழைக்கப்பட்டான். கெளரவர்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இவனுக்குத் தொல்லை தந்தாலும் இவனுடைய பலத்தால் அடக்கி ஆள்வான். அடுத்து இவன் மீதும் பொறாமைத் தீ பரவியது.

அடுத்து அர்ஜூனன். பார்க்க அழகாக கெளரவர்கள் கூட்டத்திலேயே தனித்து தெரிவான். கல்வி, வில் வித்தை என்று அனைத்திலும் புகழ்பெற்று விளங்கினான். எல்லாவற்றிலும் தனித்து சிறந்து இருந்ததால் இவனது திறமை மீது கெளரவர்களோடு கர்ணனையும் பொறாமைத் தீயில் தள்ளி யது.

பஞ்ச பாண்டவர்களில் இறுதியானவர்கள் நகுலனும், சகாதேவனும். இருவருமே ஜோதிடக்கலையில் சிறந்து விளங்கினார்கள். ஞானிகளின் கேள்விகளுக்கு தயக்கமின்றி தெளிவான பதிலை கூறும் அளவுக்கு திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கெளரவர்கள் பதிலளிக்க தயங்கினால் அவர்களை கண்டு வாய்விட்டு சிரிப்பார்கள். எஞ்சியிருந்த இவர்கள் மீதும் கெளரவர்களுக்கு பொறாமை உண்டானது.

இப்படியே பஞ்ச பாண்டவர்களில் ஒவ்வொருவர் மீதும் பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. அவர்களுக்கு ஒத்து ஊதும் வகையில் சகுனி யும், கர்ணனும் செயல்படவே கெளரவர்கள் பாண்டவர்களை அழிக்க துணிந்தார்கள். இவர்கள் பாண்டவர்களுக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தா லும் பாண்டவர்கள் தர்மத்தை மீறி எப்போதும் செயல்பட்டதே இல்லை. துரியோதனன் சூழ்ச்சி செய்து நாட்டை அபகரித்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக்கொண்டார்கள்.

மகாபாரத யுத்தம் நடந்த போது பஞ்ச பாண்டவர்களின் பொறுமைதான் அவர்களுக்கு வெற்றியைத் தேடி கொடுத்தது. ஆரம்பத்திலேயே பொறா மைத் தீயை அடக்காமல் ஆர்ப்பரித்ததால் தான் கெளரவர்களுக்கு அழிவை கொடுத்தது.   

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close