சுந்தரமூர்த்தி நாயனார்- தொடர்ச்சி 8

  தனலக்ஷ்மி   | Last Modified : 02 Jul, 2019 05:21 am
sundara-moorthy-naayanaar-part-8

சுந்தரராரும், சேரமான் பெருமாள் நாயரும் சிவாலயங்கள் சென்று மகிழ்ந்து பதிகம் பாடி இன்புற்று இருந்தார்கள். ஒரு முறை மாகோதை நகரில் இருக்கும் எம்பெருமானை வழிபட்ட இருவரும் ஆலயத்துக்குள் செல்ல முனைந்தனர். ஆலயத்துக்குள் செல்வதற்கு முன்பு இருவரும் ஆலயத் தில் உள்ள குளத்துக்குள் நீராடி செல்வது வழக்கம். 

ஒரு நாள் எம்பெருமானைத் தரிசிக்க இருவரும் சென்றார்கள். குளத்தில் மூழ்கியபோது சுந்தரார் மட்டும் முன்னதாக ஆலயத்துக்குள் சென்றார். சுந்தரரார் மனதில் என்றும் இல்லாமல் அன்று எம்பெருமானிடம் பக்தி பெருக்கெடுத்தது. அன்பின் மிகுதியால் கண்களில் கண்ணீர் பொங்கியது.
எம்பெருமானையே பார்த்தப்படி வணங்கிகொண்டிருந்த சுந்தரரார் புதியதாக பெருமானை வழிபடுவது போல பலமுறை வீழ்ந்து வணங்கினார். அன்று தான் புதிதாக பிறந்தது போலும், உலக பற்றிலிருந்து விடுபடுவது போலவுமான உணர்ச்சிகளைக் கொண்டார். தலைக்கு தலைமாலை என் னும் பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.

சுந்தரராரின் அழகு தமிழில் மயங்கிய எம்பெருமான் அவரை தம்முடன் அழைத்துக்கொள்ள திருவுளம் கொண்டார். உடனடியாக அமரர்களை அழைத்து சுந்தரரை வெள்ளை யானை கொண்டு அழைத்துவருமாறு உத்தரவிட்டார். அவர்கள் திருவஞ்சைக்களம் வந்து சுந்தரராரை வணங்கி எம்பெருமானின் அழைப்பை கூறி அவரை வரவேற்றனர். 

சுந்தரரார் மனம் மகிழ்ந்து நண்பரான சேரமானிடம் சொல்ல இயலாமல் வெள்ளை யானையில் அமர்ந்தார். வெள்ளை யானை விண்ணை நோக்கி புறப்பட்டது. அமரர்கள் மலர் தூவி போற்றினார்கள். குளத்திலிருந்து வந்த  சேரமான் சுந்தரராரைக் காணாது திகைத்தார். தம்முடைய தவத்தின் பயனாக சுந்தரரார் வெள்ளை யானை மீதேறி அமர்ந்து கயிலாயம் செல்வதைக் கண்டார். தாமும் அவரைப் பின் தொடர்ந்து கயிலாயம் செய்ய ஆசை கொண்டார்.

உடனடியாக தமது குதிரையின் மீதமர்ந்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி அவரும் விண்ணுலகம் நோக்கி பயணித்தார். வெள்ளை யானையில் பயணிக்கும் சுந்தரரை வணங்கி வேகமாக சென்ற சேரனார் கயிலைக்கு முன்னே சென்றார். ஆனால்  கயிலையின் தென் திசை வாசல் அடைத்திருந்தது கண்டு துணுக்குற்றார். வெள்ளை யானையில் வரும் சுந்தரராருக்காக காத்திருந்தார். 

இருவரும் இறங்கி கயிலாய வாசலுக்கு செல்ல விழைந்தார்கள். திருவாயில்கள் பலவற்றைக் கடந்து எம்பெருமான் வாயிலை அடையும் போது சேரனார் தடைபட்டு நின்றார். சுந்தரரார் மட்டும் எம்பெருமானிடம் சென்றார். வழியெங்கிலும் இருந்த தேவர்களும், சிவகணங்களும், முனிவர்க ளும் அவரை வாழ்த்தியும் மலர்த்தூவியும் வரவேற்றார்கள். எம்பெருமான் கற்பக வல்லியோடு காட்சிதந்தார். கண்களில் நீர்த்திரையிட இருவ ரையும் பணிந்து வணங்கினார்.

சேரமான் பெருமான் வாயிலில் தடைப்பட்டு நிற்பதை கூறினார்.உடனே இறைவனின் அழைப்பின் பேரில் நந்தி தேவர் சேரனாரை அழைத்து வந் தார். எம்முடைய அழைப்பின்றி தாங்கள் ஏன் வந்தீர்கள் என்றார் எம்பெருமான். சுந்தரராரைத்  தொடர்ந்து உங்களிடம் வந்தேன். வழியில் தடை பட்டாலும் அவருடைய உதவியால் உங்களை பார்க்கும் பேறை பெற்றுவிட்டேன். மேலும் இந்த எளியோனுக்கும் தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என்றார் சேரனார்.

மேலும் தாங்கள் மீது கொண்டுள்ள பக்தியால் தங்களைப் குறித்து திருவுலா என்னும் பிரபந்தம் பற்றி பாடினேன். அதனை தாங்கள் கேட்டு அருள் புரிய வேண்டும் என்று எம்பெருமானின் சம்மதத்தோடு திருக்கயிலாய உலாவை பக்தி பெருக்கோடு பாடினார் சேரமான். எம்பெருமான் மகிழ்ந்து சேரரையும், சுந்தரராரையும் சிவகணத்தலைவராக நியமித்து தமது திருவடி நிழலில் இருக்கும்படி பணித்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவனுக்கு எப்போதும் போல் திருத்தொண்டு செய்து மகிழ்ந்தார். பரவையாரும், சங்கிலியாரும் முன்போலவே உமாதேவி யின் சேவடிகள் போற்றும் சேடிகளாக மாறினார்கள்.  சிவாலயங்களில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close