திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் - 1

  தனலக்ஷ்மி   | Last Modified : 06 Jul, 2019 06:05 am
tiru-gnana-sambanda-moorthy-naayanaar-1

நாயன்மார்கள் 63 பேர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களது பெயர்களைச் சொல்லுங்கள் என்று சொன்னால் எல்லோ ருடைய பெயரை நினைவில் கொள்ளாவிட்டாலும் குறிப்பிட்ட சில நாயன்மார்கள் அனைவர் மனதிலும் பதிந்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். ஒரு கட்டுரைக்குள் அடங்க முடியாத வரலாறு இவருடையது.

நீர்வளமும், நிலவளமும், தெய்வ வளமும் கொண்ட தலமான சீர்காழியில் அந்தணர் குலத்தில் வாழ்ந்து வந்தவர் சிவபாத விருதயர். இவரது மனைவி பகவதியார். இருவருமே சிவபெருமானின் மீதும் அடியார்கள் மீதும் பக்தியும் அன்பும் கொண்டிருந் தனர். இவர்களது காலத்தில் சைவ சமயமானது சற்றே நலிவுற்று சமணமும், பெளத்தமும் தலைதூக்கி இருந்தது.

 திருவெண்ணீறு தரிக்கும் பெருமையை உணராது சைவ சமயத்துக்கு ஏற்பட்ட இத்தகைய நிலையை எண்ணி வருந்தினார்கள் இந்த தம்பதியர். அகிலமெல்லாம் திருநீறு சமயத்தைப் பரவ செய்ய தனக்கொரு புதல்வன் வேண்டும் என்று  பரம்பொருளை வேண்டினார்கள். எந்நேரமும் எம்பெருமானின் நினைவிலேயே இருந்தார்கள். இவர்களது வேண்டுதலை நிறைவேற்ற திருவுளம் கொண்டார் திருத்தோணியப்பர்.

எம்பெருமானின் அருளால் கருவுற்றார் பகவதியார். வைகாசி முதல் நாளில் இத்தம்பதியருக்கு பூவுலகில் அவதரித்தார் திருஞானசம்பந்த மூர்த்தியார். குழந்தை செல்வத்தால் மகிழ்வுற்ற இத்தம்பதியர் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்தார்கள். சிவாலயங்களில் மூன்றுவேளையும் கோலாகலமாக பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. எம்பெருமானின் அருளால் கிடைத்த மகனாயிற்றே. சீராட்டி வளர்த்தார்கள் பகவதியாரும், சிவபாதவிருதயரும்.

குழந்தை தளிர் நடைப்பருவம் வளர்ந்தது. ஒரு நாள் வழக்கம் போல் சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள குளத்தில் நீராட சென்றார். தந்தையின் பிரிவை தாளாத சின்னக்குழந்தை கால் சலங்கை கிணுகிணுக்க மெல்ல அடியெடுத்து  அழுதுகொண்டே வந்தான் மூன்று வயது பிள்ளைபிள்ளையின் அழுகையால் மனம் வருந்திய தந்தை குழந்தையை அள்ளி தோள்மீது சுமந்தபடி நீராட குளத்துக்கு சென்றார்.

குளத்துக்கு வந்ததும் குழந்தையைக் கரையில் கிடத்தி நீராட குளத்தில் இறங்கினார். தந்தையைக்  கண்ணால் காண முடியாத குழந்தை பயத்தில் அழுதது, ஆலய கோபுரத்தைக் கண்டு அம்மே..அப்பே என்று செப்பு வாயால் அழைத்தது.குழந்தையின் அழு கையைத் தாங்கமுடியாத தோணியப்பர் உமாதேவியுடன் வானவீதியில் எழுந்தருளினார்எம்பெருமான் குழந்தைக்கு பால் ஊட்ட தேவியைப் பணித்தார்.

குழந்தையின் அருகில் வந்த உமாதேவி குழந்தையை அணைத்து  மகிழ்ந்தாள். தம் மடியில் கிடத்தினாள். குழந்தையின் கண்ணீ ரைத் துடைத்தாள். தமது முலைப்பாலைபொற்கிண்ணத்தில் ஏந்தினாள்குழந்தையிடம் சிவஞான அமுதம் கலந்த பொற் கிண் ணத்தை நீட்டினாள். குழந்தை அழுகையை நிறுத்தியதுஅமரர்க்கும்அருந்தவசியருக்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப் பற்ற சிவஞானத்தை சம்பந்தம் செய்ததாலே சிவஞான சம்பந்தர் என்னும் பெயரை பெற்றது குழந்தை.

சிவபாதவிருதயர் குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக்கொண்டு கரையேறினார். குழந்தை அருகில் வந்தார். குழந்தையின் கைகளில் இருந்த பொற்கிண்ணமும், வாயில் வழிந்தோடிய பாலையும் கண்டு துணுக்குற்றார். பால் மனம் மாறா பாலகனுக்கு யாரோ எச்சில் பால் கொடுத்திருப்பதை அறிந்து சினம் கொண்டார். குழந்தையிடம் சிறு குச்சியை காட்டி எச்சிபால் கொடுத்தது யார் என்று கடிந்து கேட்டார். தந்தையின் கோபத்தைக் கண்டு கண்ணீர் சொறிந்த சிவஞான சம்பந்தர்  ஒருக்காலை தூக்கி ஒரு விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணில் எழுந்தருளிய எம்பெருமானை காட்டினார்.

அதன்பிறகு ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் வேதங்களுக்கு மூலமாக ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பொங்க  தோடுடைய சிவன் என்று பாடத்தொடங்கினார். குழந்தையை மிரட்ட வந்த தந்தை திகைத்தார். கையிலிருந்த சிறு குச்சி நழுவி யது. அந்தணர் மகிழ்ச்சியில் கூத்தாடினார். தமிழ் பதிகத்தால் இறைவனின் வருகையை உணர்த்திய சிவஞான சம்பந்தரின் முகத் தில் தெரிந்த தெய்விக ஒளியைக் கண்டு ஆனந்தம் கொண்டார்.

ஞானசம்பந்தர் தோணியப்பரின் ஆலயத்துக்குள் உள்ளே நுழைய தனது திருவடியை எடுத்துவைத்தார். தந்தையும் பின் தொடர்ந் தார். அங்கு தோணியப்பரை வழிபட்டு பதிகம் பாடிய பிள்ளையை இமைகொட்டாமல் பார்த்தார். இந்த செய்தி மக்களிடம் பரவ அனைவரும் கோயிலுக்குள் வந்தார்கள்அனைவருக்கும் எம்பெருமான் உமாதேவியருடன் வந்து தம்மை ஆட்கொண்டதை மொழிந்தார் ஞானசம்பந்தர்.

மக்கள் அனைவரும் ஞானசம்பந்தரைப் போற்றீனார். சைவம் தழைக்க எம்பெருமானின் அருள் பெற்ற செல்வனே என்று புகழ்ந் தனர். சிவபாதவிருதயர் தனது மகனை சுமந்துகொண்டு ஆலயத்தைச் சுற்றி மூன்று முறை சுற்றிவந்தார். மக்கள் புடைசூழ அவரை வாழ்த்தி நறுமண மலர்களைத் தூவி தோரணங்கள் கட்டி விடைகொடுக்க சிவபாதவிருதயர் தனது மகனை  தோளில் அமர்த்தி இல்லத்துக்கு அழைத்துவந்தார்.

நடந்ததைக் கேள்வியுற்ற பகவதியார் ஞானசம்பந்தருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். குழந்தையை அணைத்து முத்தமாறி பொழிந்தார். உலகை வென்ற உவகை உண்டானது அதன் பிறகு தந்தையுடன் தினமும் ஆலயம சென்ற ஞானசம்பந்தரர்... தொடர்ச்சி நாளை பார்க்கலாம். 

 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close