கர்வத்தால் அழிவு மட்டுமே உண்டாகும்

  தனலக்ஷ்மி   | Last Modified : 06 Jul, 2019 06:14 am
karvam

நிறை குடம் நீர் தளும்பாது என்று சொல்வார்கள். ஆனால் சிலநேரங்களில் கிடைக்காத வரம் கிடைக்க மனம் முழுக்க நிறைவு பெறாமல் கர்வம் தலைதூக்குவதும் உண்டு. இந்த கர்வம் தான் அழிவுப்பாதைக்கு அழைத்துசெல்லும் என்பதை  உணர்த்தும் கதை இது.

இராவணன் பிரம்மனின்  வழிவந்த வேத நெறியாளன். பரமேஸ்வரனைத் தியானித்து வரங்கள் பல பெற்று மகிழ்ந்தான். சர்வேஸ் வரனின் அருளால் பெறுவதற்கரிய  வரங்களைப் பெற்று எட்டு திசைகளையும் வென்றான். இலங்கையை ஆண்டுவந்த காலத்தில் இராவணனுக்கு குபேரன் இருக்கும் வடதிசை மீதும் ஆசை வந்தது. பெற்ற தவத்தின் பயனால் அவையும் சாத்தியமே என்று ஓடிய இராவணன், குபேரனை வென்று அவனிட இருந்த புஷ்பக விமானம் உட்பட அனைத்தையும் கைப்பற்றினான்.

குபேரனின் புஷ்பக விமானத்துக்காகவே படையெடுத்த இராவணனுக்கு அந்த விமானத்தில் அமர்ந்து பயணம் செய்ய ஆசை வந் தது. புஷ்பக விமானத்தில் பறந்த இராவணன் இமயமலையைக் கடந்து செல்ல வேண்டும். பரமேஸ்வரன் இருக்கும் இடமா யிற்றே. ஆனால் என்ன அவரே மகிழ்ந்து வரங்கள் அருளியிருக்கிறாரே என்று நினைத்த இராவணன் இமய மலையை கடக்க முனைந்தான்.

வழியிலேயே வழிமறித்த நந்திதேவர், இராவணனை தடுத்து நிறுத்தினார். நில் இராவணா, பரமேஸ்வரன் வீற்றிருக்கும் இந்த இடத்தின் பறந்துசெல்ல யாருக்கும் உரிமை இல்லைஅப்படியிருக்க உன்னை மட்டும் எப்படி அனுமதிக்க முடியும்இங்கு பறந்து செல்வது நல்லதல்ல.அதனால் திரும்பி செல் என்றார்.

இராவணனுக்கு ஆத்திரத்தில் அறிவு மங்கியது. கண்கள் சிவந்தது. நந்தியைக் கண்டு ஆவேசமாக குரங்கு முகம் கொண்ட கோரமா னவனெ...என்னை விலகி போக சொல்கிறாய். நான் ஏன் விலக வேண்டும். நான் செல்லும் வழியில் தான் இந்த மலை இருக்கிறது. எனக்கு இடையூறாக இருக்கும் இந்த மலையை எடுத்து எறிகிறேன் பார் என்று ஆவேசம் கொண்டவனாய் இறங்கினான்.

இவ்வளவு ஆவேசம் உனக்கு ஆகாது. என்னை  குரங்கு என்று இகழ்ந்தாயே. உன் இனமே குரங்கு இனத்தால் தான் அழியும்  என்று சாபமிட்டார். இன்னும் ஆவேசமடைந்த  இராவணன், புஷ்பக விமானத்திலிருந்து  இறங்கி தன்னுடைய இருபது கரங்களாலும், கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றான். இதனால் கயிலாயம் குலுங்கியது. தேவர்களும், கணங்களும் நிலைதடுமாறி விழுந் தார்கள். பரமேஸ்வரியே நிற்க வழியில்லாமல் பரமேஸ்வரனைப் பிடித்துகொண்டாள்.

நடந்ததை அறிந்த பரமேஸ்வரன் இராவணனின் கர்வத்தை எண்ணி  தன்னுடைய வலக்கால் கட்டை விரலை கயிலை மீது ஊன் றினார். தாங்குவானா இராவணன்.முழி பிதுங்கி நின்றான். தோள்கள் நெருக்கியது. வலியால் கதறி துடித்தான். அப்போது அவன் முன் தோன்றிய வாகீசர் என்னும் முனிவர் எம்பெருமானைச் சமாதானப்படுத்துவதே இப்போதைய தீர்வு. அதானால் சிவனை நினைத்து சாமகீதம் பாடு என்றார்.

தவறை உணர்ந்த இராவணன் தனது பத்து தலைகளைப் பறித்து ஒன்றை குடமாகவும், கையை தண்டாகவும், நரம்புகளைத் தந்தி யாகவும் மாற்றி  வீணை தயாரித்து எம்பெருமான் உள்ளம் கரைய சாமகானம் பாடினான். இறைவனும் மகிழ்ந்து அவரது ருத்ர வீணையை மீட்டினார்இசையில் மகிழ்ந்து இறைவன் காலை எடுக்க இராவணனும் சட்டென்று மலையை இறக்கினான்.

சிவபெருமான் மகிழ்ந்து இராவணனுக்கு சந்திரகாசம் என்னும் வாளையும், முப்பத்து முக்கோடி கால ஆயுளையும் அளித்தார்தமக்கு இணையான ஈஸ்வரன் பட்டத்தையும் பெற்றார்எல்லாம் கொடுத்த இறைவன் அவனுக்கு நந்திபகவான் கொடுத்த சாபத்தை மட்டும் திரும்ப பெறவில்லை. குரங்கு இனத்தாலேயே இராவணன் அழிந்தான்.

இறைவனுக்கு என்ன செய்தாலும் ஏற்று மகிழ்ந்து நமக்கு திருவருள் புரிவார். ஆனால் இராவணன் கர்வத்தால் உதித்த வார்த்தை களாலும் அதனால் பெற்ற சாபத்தையும் மட்டும் எம்பெருமான் நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close