திருநாவுக்கரசு நாயனார் -3

  தனலக்ஷ்மி   | Last Modified : 16 Jul, 2019 10:57 pm
tirunaavukkarasu-naayanaar-3

பல்லவ மன்னனின் கட்டளைக்கேற்ப மருள் நீக்கியாரை தீ மிகுந்த அறையில் 7 நாட்கள் தள்ளினார்கள். ஆனால் அந்த தீப்பிழம்பு அறையிலும் வெண்ணீறு தரித்து தெய்வ மணம் பரப்பி பக்தியுடன் நின்ற மருள் நீக்கியார் உயிரோடு இருக்க காரணம் சமண மதத்தின் மந்திரங்களை உச்சரித்த தால் தான் என்று சமணர்கள் முறையிட்டார்கள். அப்படியாயின் தருமசேனருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டான் மன் னன். கொடிய நஞ்சு கொடுத்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றார்கள் சமணர்கள்.

பால் சோற்றில் நஞ்சை கலந்து நாவுக்கரசரை உண்ண செய்தார்கள். நஞ்சுண்டானை நினைத்து உண்டால் நஞ்சும் அமுதமாகும் என்ற நாவுக்கரசர் மகிழ்வோடு ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லி பால் சோறு உண்டார்.முன்னிலும் அதிக ஒளியுடன் விளங்கினார். இதைக் கண்டு சமணர்கள் தங்கள் மதத்துக்கு கேடு நேரவிருப்பதாக எண்ணி கலங்கினார்கள். மீண்டும் மன்னனை அணுகி தருமசேனரை மதயானை வைத்து கொல்லலாம் என்று ஆலோசனை கூறினார்கள்.

மன்னனும் அவ்வாறே உத்தரவிட்டதும் நாவுக்கரசர் முன்பு மதயானையை அவிழ்த்துவிட்டார்கள். சுண்ணவெண் சந்தைனச் சாந்தும் எனத்  தொடங்கும் சிவப்பாடலை பாடியபடி அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை என்று முடித்தான். சீறிய யானை நாவுக்கரசரை சுற்றி வந்து அவர் பாதத்தில் வணங்குமாறு நிலத்தில் வீழ்ந்து எழுந்தது. பாகன் நாவுக்கரசரை கொல்ல வேண்டும் என்று கட்டளையிட சொன்னார் கள்  சமணர்கள். அதன்படி பாகனும் யானையைத் தூண்டிவிட யானை ஆவேசத்துடன் திரும்பி பாகனை தூக்கி பலம் கொட்ட மட்டும் தூக்கி வீசி யது. அப்போதும் ஆவேசம் அடங்காமல் சுற்றி நின்ற சமணர்களையும் மிதிக்க தொடங்கியது. அஞ்சிய சமணர்கள் அரசனிடம் தஞ்சம் அடைந் தனர்.

அரசன் சமணர்களிடம் வெறுப்புக்காட்டினார் என்ன செய்தும் நாவுக்கரசரை ஒன்று செய்ய இயலவில்லை என்னும் போது மீண்டும் என்ன செய்வ தாக சொல்கிறீர்கள் என்றார். பெரிய கல்லில் நாவுக்கரசரை கட்டி கல்லோடு கடலில் போடவேண்டும் என்றார்கள். மன்னனும் இசைந்து காவலர் களை ஏவினான். நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் எறிந்தார்கள்.

நாவுக்கரசர் முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல்  சொற்றுணை என அடி எடுத்து நற்றுணையாவது நமசிவாயவே என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார். நாவுக்கரசரின் பாமாலை பாடி ஐந்தெழுத்தை ஓதியதும் கயிறு அறுபட்டு கல் தெப்பமாக மிதந்தது. பிறகு நாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூருக்கு அருகில் மிதந்துவந்தார். அத்தலத்தில் இருந்த சிவனடியார்கள் நாவுக்கரசரை அன்போடும் பக்தியோடும் அழைத்து மகிழ்ந்தார்கள். திருப்பாதிரிப்புலியூர் ஐயனை காண அழைத்துச்சென்றார்கள். 

உருத்திராட்சமும் மேனியில் வெண்ணீறு தரித்தும் கையில் உழவாரமும் தாங்கி நின்ற அப்பர் ஈன்றாளுமாயெனக்கெழுந்தையுமாய் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறைவனைக் குளிர வைத்தார். சூழ இருந்த மக்கள் அடியாரைக் கண்டு மகிழ்ந்தனர். நடந்ததைக் கேள்விபட்ட பல் லவ மன்னன் நாவுக்கரசருக்கு செய்த தீமைகளை எண்ணி மனம் வருந்தினான். சமணர்களை விரட்டியடித்தான். நாவுக்கரசரை தேடி சென்றான். 

நாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு திருவதிகை வந்தடைந்தார். எல்லையில் வரவேற்ற பக்தர்கள் புடைசூழ திருவீரட்டானேஸ்வரரை வழிபட்டு இறைவன் தன்னை ஏழையே நான் என்னும் பதிகம் பாடி எம்பெருமானைப் போற்றினார். பிறகு அங்கேயே சில காலம் தங்கியிருந்து, எம்பெரு மானைத் துதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதைக் கேள்வியுற்ற மன்னன் நால்வகை படைசூழ நாவுக்கரசரை சென்று சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கி மன்னிக்க வேண்டினான். நாவுக்கரசர் மன்னனை மன்னித்து ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து வெண்ணீறு பூசினார். சில காலம் நாவுக்கரசரோடு தங்கியிருந்த மன்னன் பிறகு அவரிடம் விடைபெற்று பாடலிபுரத்தை நோக்கி கிளம்பினான். அங்கிருந்த சமணர்க ளின் மடங்களை இடித்து தள்ளினான்.

திருவதிகையில் குண பாலீசுரம் என்னும் சிவத்தலத்தைக் கட்டி சைவ சமயத்துக்கு தொண்டுகள் புரிந்து மகிழ்ந்துவந்தான். நாவுக்கரசர் திருவதி கையிலிருந்து திருவெண்ணெய் நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவிலூர் என்னும் தலங்களில் சென்று எம்பெருமானை வழிபட்டார். ஐயனே சில காலமாவது சமண சமயத்தில் ஊறிப்போன என்னுடைய இந்த ஊன உடலில் உயிர் வாழ விரும்பவில்லை. திருவெண்ணீறு அணிந்த எம் மேனியில் சூலத்தையும், இடபத்தையும் பொறித்து அருளவேண்டும் என்றார். பொன்னாற் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் எனத் தொடங் கும் திருப்பதிகம் பாடியபோது பூத கணங்கள் நாவுக்கரசர் தோளில் சூல முத்திரையும், இடப முத்திரையும் பதித்து சென்றார்கள். அடிகளார் மகிழ்ந் தேன் என்று எம்பெருமானை மீண்டும் மீண்டும் வணங்கி மகிழ்ந்தார் திருநாவுக்கரசர். 

 

newstm.in                             

 


 
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close