அனைத்தும் அறிந்தவர் சாய்பாபா - பாகம்.15

  அனிதா   | Last Modified : 26 Sep, 2019 03:38 pm
history-of-saibaba

ஷீரடியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஆர்..டி இவர் ஒரு நாள் இரவில் வெளிய நடந்து போய்க் கொண்டிருந்தார்கும்மிருட்டு .அவர் மனதிற்குள் சற்று பயம் நிலவியது .எனவே வேகமாக வீட்டை நோக்கி நடைபோட்டார் அப்போது ஒரு மரத்தின் அடியில் ஏதோ ஒரு உருவம் நிற்பது அவருக்குத் தெரிந்ததுகூர்மித்துக் கவனித்தபோது அது மனித உருவமல்ல என்பது புலனாகியதுஅப்படியானால்?

அது பேய் !பிசாசு!

அதிர்ந்து போனார் அச்சத்தில் அவர் இரு தயம் வேகமாக அடித்தது. சாய்பாபாவை மனதிற்குள் நினைத்துஅவரைப் பற்றிய பாடல்களை உச்சரித்தவாறே வேகமாக வீட்டை நோக்கி நடந்தார் .

மறு நாள் வழக்கம் போலவே சாய்பாபாவைத் தரிசனம் செய்யச் சென்றார்அப்போது, "நேற்றிரவு நீ எதைக் கண்டாய்"? என்று சாய்பாபா அவரிடம் கேட்டார்.

ஒரு பேயைப் பார்த்தேன் சாய்பாபா "என்றார் நடுக்கத்துடன் இதனை சாய்பாபா அறிந்துகொண்டிருப்பது இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அவருக்கு.

அது பேய் கிடையாதுநான் தான் ",என்றார் சாய்பாபா" "இல்லை சாய்பாபாஅது நீங்கள் இல்லைஅது பேயே தான்நான் நன்றாகவே பார்த்தேன்என்றார் ஆர்.டி

"நிச்சயமாக அது நானே தான்சந்தேகம் இருந்தால் உன் தாயிடம்

போய்க்கேள் என்றார் சாய்பாபா.

அந்தப் பக்தருக்கு சாய்பாபாவின் கூற்று பெரும் குழப்பமாக இருந்தது. 'சாய்பாபா எப்படி இவ்வாறு அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ?'

வீட்டிற்கு வந்த அந்த பக்தர் தன் தாயிடம் இதனைப் பற்றிக் கேட்டார்.

"அனைத்து பேய்,பிசாசுகளும் சாய்பாபாவின் அதிகாரத்திற்கு உட்பட்டே இயங்குகின்றனஎன்றார் அவரின் தாய்.

ஆச்சர்யமாக இருந்தது அவருக்குதிரும்பவும் சாய்பாபாவிடம் வந்தார் தன் தாய் கூறியதை வியப்பு விலகாமல் தெரிவித்தார்.

அதற்கு சாய்பாபா கூறினார், "அவை எல்லாவற்றிலும் நானே இருக்கிறேன்பூதங்கள் நமக்கு எந்தவொரு தீங்கும் செய்வதில்லைகடந்த வருடமே இது குறித்து நான் உனக்கு விளக்கமாகக் கூறியிருக்கிறேன் என்றார் .

விராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com


newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close