சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 04:30 pm
history-of-saibaba

ஹரியானாவைச்  சேர்ந்த முதியவர் ஒருவர் சிறுநீரகக் கல் அடைப்பினால் அவஸ்தைப்பட்டு வந்தார் . வயதான காரணத்தால் அந்த வலியைத் தாங்கும் சக்தியை அவர் இழந்திருந்தார்.  அவரைப் பார்த்த சிலர், அறுவை சிகிச்சை மூலம் இந்த கற்களை அகற்றி விடலாம் என்று கூறினார். அறுவை சிகிச்சைக்கான நாளையும் குறித்தனர்.

அத்தருணத்தில், அவ்வூரின் பெருந்தனக்காரர் ஒருவர் பெரியவரைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.  அவர் தீவிர சாய்பாபா பக்தரும்கூட.  வயதான காலத்தில் அறுவை சிகிச்சையைத் தாங்கும் சக்தி பெரியவருக்கு இருக்காதே என்று நினைத்தார். அவர் எப்போதும் சாய்பாபா வழங்கிய விபூதியை வைத்திருப்பார். உடனே தனது இல்லத்திற்குச் சென்று அந்த விபூதியை எடுத்து வந்தார்.  குவளை ஒன்றில் தண்ணீர் எடுத்து அதில் அந்த விபூதியைக் கரைத்தார். சாய்பாபாவை நினைத்துக் கொண்டு அதனைப் பருகுமாறு பெரியவரிடம் கொடுத்தார். அவரும் அப்படியே செய்தார்.       சற்று நேரம் கழிந்தது. பெரியவர் சிறுநீர் கழித்தார். அப்போது அவரது சிறுநீரகப்பையில் அடைத்து வலி கொடுத்துக் கொண்டிருந்த கல் ,பொடிப் பொடியாக சிறுநீருடன் கரைந்து வெளியே வந்தது.  பெரியவரின் நோயும் குணமாகியது. இது அந்தப் பகுதி மக்களை அதிசயிக்கச் செய்தது.
                        ஓம் ஸ்ரீ சாய் ராம்!!!


 
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close