புத்திர பாக்கியம் அருளிய சாய்பாபா

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2019 03:51 pm
history-of-saibaba

தாமோதர் ராஸ்னே என்ற பக்தர்  ஒருவர் இருந்தார். இவர் சாய்பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவர் ஆவார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஆனால், இருவருக்குமே குழந்தை பாக்கியம் எட்டாத கனியாகவே  இருந்தது என்பது தான் சோகத்திலும் சோகம். சாய்பாபாவிடம் நேரில் வந்து தன் குறையைக் கூறி அழுதார்.  

சாய்பாபாவும் அவருக்கு அருளுவதற்காக எட்டு மாம்பழங்களைத் தனியாக எடுத்து வைத்திருந்தார்.  அதனைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார். ஆனால், அந்த கூடையில் நான்கு மட்டுமே இருந்தது. மீதமுள்ள நான்கு பழங்கள் என்னவாயிற்று? இது அனைவரையும் வருத்தமடையச் செய்தது.

எனினும் சாய்பாபா அந்த நான்கு பழங்களையும் தாமோதரிடம் அளித்தார். “இதனை உன் மனைவியரிடம் கொடு .மற்றவை நடக்கும் "என்று கூறினார்”  சாய்பாபா. தாமோதரும் அப்படியே செய்தார். என்ன  ஒரு ஆச்சரியம்! சாய்பாபா கொடுக்கச் சொல்லியதுபோல எட்டு மாம்பழங்களும் எட்டுக் குழந்தைகளைக் குறிப்பதாக அமைந்தது.  ஆம் அவரது மனைவியர்  இருவரும் எட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

ஆனால், இதிலும் ஒரு சோகம் ஏற்பட்டது. அந்த எட்டுக் குழந்தைகளிலும் நான்கு குழந்தைகள் இறந்து போயின. ஆக, சாய்பாபா கொடுத்த எட்டு மாம்பழங்களில் நான்கு காணாமல் போனதன் உண்மை அந்த பக்தருக்குத் தற்போது பரிபூர்ணமாக விளங்கிற்று. சாய்பாபாவின் அற்புதமே தனி !!!!   
                     ஓம் ஸ்ரீ சாய்ராம் !!!


 
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close