பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் சாய்பாபா!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2019 04:11 pm
history-of-saibaba

சாய்பாபா சகல உலகத்தை அடக்கி ஆளும் வல்லமை பெற்றவர்  இவர். இதனை பல்வேறு சூழ்நிலையில்  நிரூபித்துக்காட்டி உள்ளார்.  ஒவ்வொரு நாளும் பக்தர்களை ஆச்சர்ய நிலையில் மூழ்கடித்துள்ளார் சாய்பாபா. ஷீரடியில் ஒருநாள்  கடும் காற்று வீசியது.  பலமாக புயலடித்தது. வானம் இருளில் மூழ்கி  மழை  பொழிந்து தள்ளியது. இதனால் ஊர் முழுவதும் வெள்ளமாய் மாறியது.  வீடுகளுக்குள்ளும் தண்ணீர் வேமாகப் புகுந்து சேதம் செய்தது. 

இதனைப் பார்த்த அவ்வூர் மக்கள்  நடுநடுங்கிப் போயினர்.  எல்லோரும் ஆதரவற்ற தங்களுக்கு ஆதரவளிக்கு மாறு  சாய்பாபாவிடம் சென்று முறையிட்டனர். “நம்பினோரை கைவிடமாட்டர்” என்பது தானே சாய்பாபாவின் தத்துவம். உடனே துவாரகா மயியை விட்டு வெளியே வந்து பார்த்தார் சாய்பாபா. மழையில் நனைந்தவாறு வானத்தைப் பார்த்தார். "இத்துடன் உன் சீற்றத்தை நிறுத்திக் கொள்" என்று பெருங்குரல் எடுத்து முழுங்கினார். இந்த முழக்கத்தைக் கேட்ட சற்று நேரத்தில் வானம், மழை கொட்டுவதை நிறுத்திக் கொண்டது.  

இடியும், மின்னலும் எங்கோ போய் மறைந்து கொண்டது என்பது தெரியவில்லை.  காற்றைக் காணவே இல்லை. ஷீரடியில் உள்ள மக்கள் மகிழ்ந்தனர். சாய்பாபாவின் அற்புத சக்தியைக் கொண்டு அதிசயித்தனர். பக்தர்கள் சாய்பாபா வின் மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் தோற்றுப் போவதில்லை.

                                                 ஓம்ஸ்ரீசாய்ராம் !!!

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close