நெருப்பை அடக்கிய சாய்பாபா

  சாரா   | Last Modified : 19 Dec, 2019 06:15 am
history-of-sai-baba

மசூதியில் இருபத்து நான்கு மணிநேரமும் துனி என்று  அழைக்கப்படும் ஹோம குண்டத்தில் தீ எரிந்து கொண்டே இருக்கும். ஒருநாள், அதிலிருந்த நெருப்பு இன்னும் வேகமாக எரியத் தொடங்கியது. கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் பதற்றமடைந்து, அடுத்து என்ன செய்வது என்று  யோசிப்பதற்குள், அந்த நெருப்பு மசூதியில் கூரையைத் தொட்டுவிட்டது. பதறிப்போனார்கள் பக்தர்கள். என்ன செய்வது? ஒரு சிலர் கூறினார்கள், தண்ணீர் ஊற்றி அனைத்து விடலாம் என்று, வேறு சிலரோ, ஹோமக் குண்டத்தில் இருக்கும் விறகுகளை வெளியே எடுத்துவிடலாம் என்று கூறினர்.

இப்படி ஆளாளுக்கு பல்வேறு கருத்துகளைத்  தெரிவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார் சாய்பாபா. உடனடியாக தன் கைத்தடியை எடுத்து சுழன்று கொண்டிருக்கும் சுடுநெருப்பை நோக்கி நீட்டினார் . “ஏன் இப்படி ஆக்ரோஷமாக இருக்கிறாய். கீழே இறங்கி அமைதியாக இரு" என்று நெருப்பிற்குக் கட்டளையிட்டார் சாய்பாபா. நெருப்பும் கட்டுப்பட்டது. அப்படியே  தனது  திமிர் பிடித்த  ஜ்வாலையை அடக்கிக் கொண்டு அமைதியாகியது .
அங்கிருந்த அத்தனை பக்தர்களும் இந்தக் காட்சியைக் கண்டு விக்கித்துப் போயினர்.

டாக்டர். வி. ராமசுந்தரம்
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close