ஐந்து அறிவு ஜீவனுக்கும் கருணை காட்டியவர்

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2019 04:07 pm
history-of-sai-baba

ஷீரடியில் உள்ள மிகச் சிறிய நாய் ஒன்றுக்கு திடீரென்று வெறி பிடித்தது . அங்குள்ள பெரிய நாய்களை எல்லாம் துரத்தித் கடித்தது. மனிதர்களையும் கடிப்பதற்காகப் பாய்ந்தது.  இதனால் கோபமடைந்த அவ்வூர் மக்கள் கையில் கிடைத்த கம்பு, கற்களை எடுத்துக்கொண்டு அதனை அடித்துக் கொல்வதற்கு விரைந்தார்கள். அச்சமடைந்த அந்த நாய், வேகமாக துவாராக மயியை நோக்கி ஓடியது. மக்களும் விடாமல் துரத்திச் சென்றார்கள். ஆனால், அது அப்படியே சாய்பாபாவை நோக்கிச் சென்று அவர் பின்னால் போய்ப் பதுங்கிக் கொண்டது. 

அதனைத் துரத்திக் கொண்டு ஓடிவந்த மக்கள் அது சாய்பாபா வின் பின்னால் போய் ஒளிந்துகொண்டதைப் பார்த்ததும் பதறினார்கள் . “சாய்பாபா ஜாக்கிரதையாக இருங்கள். அந்த நாய்க்கு வெறி பிடித்திருக்கிறது. உங்களைக் கடித்து விடப் போகிறது. நாங்கள் எப்படியாவது அதனைக் கொன்று விடுகிறோம் " என்று பரபரப்படைந்தனர். ஆனால், அந்த நாயைக் கண்டு பயப்படாத சாய்பாபா, அந்த மக்கக் கோபமாக இருப்பதைப் பார்த்தார்.

" வெறி பிடித்திருப்பது அந்த நாய்க்கு அல்ல. உங்களுக்குத் தான். முதலில் நீங்கள் அனைவரும் வெளியே போங்கள். ஒரு எளிய ஜந்துவைப் போய் துன்பப்படுத்தி, அதனைக் கொல்லத் துடிக்கிறீர்களே !" என்றார் சாய்பாபா. வந்திருந்த மக்கள் அனைவரும் ஆச்சர்யப் படத்தக்க விதமாக அந்த நாய் வெறி தணிந்து சாதுவானது.

                 ஓம் ஸ்ரீ சாய்ராம்

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close