சாய்பாபாவின் ஸத்வ குணரூபம்

  சாரா   | Last Modified : 07 Feb, 2020 11:38 pm
saibaba-spl-article

சாய்பாபாவினால் ஷீரடி முக்கியத்துவம் பெற்றது. கடப்பதற்கு மிகவும் கடினமான  இகவாழ்வை  அவர்  வென்றார். சாந்தி  அல்லது  மனஅமைதியே அவரின் அணிகலன்.  விவேகத்தின் பெட்டகம்.  அவர் கர்ணனையொப்ப  வள்ளல்களுள் எல்லாம் தலை சிறந்த வள்ளலாக  விளங்கினார்.

                                                      

சாராம்சம் அனைத்தினின்றும் பெற்ற சாராம்சமாகவும் இருந்தார்.  அவருக்கு அழியும் பொருள்கள் மீது ஆசை இல்லை. அவருடைய ஒரே ஈடுபாடான  ஆன்ம உணர்விலேயே எப்போதும் கவரப்பட்டார்.  இவ்வுலகப் பொருள்களிலோ  அல்லது இவ்வுலகத்தைக் கடந்தவற்றிலோ அவர்    மகிழ்ச்சியடையவில்லை.  அவரின் அந்தரங்கம் (உள்ளம்) ஓரு கண்ணாடி போன்று தூய்மையானது.  அவரின்  மொழிகள் எப்போதும் அமுதத்தைப் பெய்தன.   பணக்காரர் ,ஏழை யாவரும் அவருக்கு ஒன்றே.  புகழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை அவர் அறிந்திருக்கவில்லை அல்லது மதிக்கவில்லை.   அவரே எல்லா உயிர்களுக்கும் இறைவன் ஆவார். அவர்  அனைவருடனும் சரளமாக பேசி பழகினார். நடிப்பை யே தொழிலாக கொண்ட குமரிகளின் நடிப்பையும், நாட்டியத்தையும் கண்டார். கஜல் பாடல்களைக் (தெம்மாங்கு) கேட்டார்.  ஆயினும், இம்மியளவும் சமாதி நிலையிலிருந்து விலகவில்லை.

                                                                   

           அல்லாவின் நாமம் எப்போதும் அவர் நாவில் இருந்தது.  இவ்வுலகம் விழித்திருக்கும்  போது அவர் தூங்கினார்.  இவ்வுலகம் தூங்கும் போது அவர் சுறுசுறுப்பாய் இருந்தார்.  ஆழ்ந்த கடலையொப்ப அவர் மனம் அமைதியாய் இருந்தது.  அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க இயலாததாய் இருந்தது.  அவர் ஓரிடத்தில் வாழ்ந்தார்.  எனினும் இவ்வுலகின் நடவடிக்கைகள் அனைத்தையும்  அவர் அறிவார்.  அவரின் தர்பார் கவர்ச்சிகரமானது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான கதைகளை திருவாய் மலர்ந்தார்.  ஆனாலும், மௌன விரதத்திலிருந்து இம்மியளவும் பிறழவில்லை.  மசூதியில் உள்ள சுவரின் மீது எப்போதும் அவர் சாய்ந்து கொண்டிருந்தார்.   அல்லது  காலை, மதியம், மாலை இவற்றில் லெண்டி ( தோட்டம்), சாவடி(சயன அறை) இவற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.  எப்போதும் ஆன்ம உணர்வில் கருத்துள்ளவராகவே இருப்பார்.  சித்தராயினும் சாதகரைப் போல நடித்தார். அவர் எளிமையாகவும், தாழ்வாகவும் அகங்காரமற்றும் இருந்து எல்லோரையும் மகிழ்வித்தார்.  இவரே  சாய்பாபா.  ஷீரடி மண் சாய்பாபா வின் திருவடிகளால்  மிதிப்பட்டதால், அசாதாரண முக்கியத்துவம் பெற்றது. ஆலந்தியை  ஞானேச்வரும் ,பைடானை ஏகநாதரும் உயர்த்தியதையொப்ப ஷீரடியை சாய்பாபா உயர்த்தினார். 
ஷீரடியின், புல்லின் அரும்புகளும், கற்களும் ஆசிர்வதிக்கப்பட்டவைகள். ஏனெனில், அவைகள்  எளிதாக சாய்பாபாவின் திருவடிகளை முத்தமிடமுடியும்.  திருவடி த் துளிகளை தமது தலையில் ஏற்று கொள்ள முடியும்.  நமது அடியவர்களுக்கு ஷீரடி மற்றும் ஒரு பண்டரீபுரம், ஜக்ந்நாதம், துவாரகை, காசி, ராமேஸ்வரம் , பத்ரி, கேதாரம், நாசிக், திரியம்பகேச்வரம், உஜ்ஜயினி, மஹாகாலீஸ்வரர் அல்லது மஹாபலீஷ்வர கோகர்ணம் போன்று ஆகியது. 

         ஷீரடியில் சாய்பாபா வுடன் தொடர்பு கொள்ளுவதே  நமது வேதமும், தந்திரமும், அஃது இவ்வுலக உணர்வையை தணித்து , தன்னுணர்வை எளிதில் வழங்குகிறது.  சாய்பாபா வின் தரிசனமே யோகசாதனம் . அவருடன் பேசுவது நமது பாவங்களைக் கழித்துற செய்யும். அவரின் திருவடிகளுக்கு நறுமண எண்ணெய் தேய்ப்பதே நமது திரிவேணி ப் பிரயாகை நீராடல், அவரின்  திருவடி தீர்த்தத்தை அருந்துவதால் நமது ஆசைகள்  அற்றுவிடும்.  அவரின் ஆணையே வேதம். அவர்  "உதி" ( திருநீற்றுச்சாம்பல்) யையும், பிரசாதத்தையும் உண்டாலே எல்லாவற்றையும் தூய்மையாக்கும்.  நமக்கு ஆறுதல் அளித்த அவரே நமது கிருஷ்ணர்,  ராமர், அவரே நமது பரப்பிரம்மம் ( பரிபூரணத்துவம்). அவர் தாமே மாறுப்பட்ட இருவினைகளுக்கு அப்பாற்பட்டவராய் தாழ்த்தப்படாமலும், உயர்த்தப்படாமலும் இருந்தார்.  அவர் எப்போதும் ஆன்மத்தில் ஸத்- சித்து- ஆனந்தமாக  கவரப் பட்டார்.  அவரின் இருப்பிடம் ஷீரடியானாலும்,  அவரின் செயல் இலக்குகள் பரந்து பஞ்சாப், கல்கத்தா, வட இந்தியா, குஜராத், தக்காணம், கன்னடம் ஆகியவரைக்கும் விரிந்திருந்தது.  இவ்வாறாகத் திக்கெட்டும் நெடுந்தூரம் சாய்பாபாவின் புகழ் பரவி எல்லா பகுதிகளிலிருந்தும் அடியவர் திருக்கூட்டம் அவரின் தரிசனத்தையும் , ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காக வந்தது. அவருடைய தரிசனம் ஒன்றினாலேயே மக்களின் மனம் சுத்தமாக இருப்பினும், இல்லாவிட்டாலும் கணத்தில் அமைதி அடையும். ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அவர்கள் பெற்றார்கள் .இது மிகையாகாது. 
 
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close