கிறிஸ்துமஸ் பற்றிய சில உண்மை தகவல்கள்!

  திஷா   | Last Modified : 24 Dec, 2018 03:57 pm
christ-mass-special

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். மாட்டு தொழுவத்தில் ஏசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்த சூழ்நிலையை கண்முன் கொண்டு வரவே இந்த குடில் அமைக்கப்படுகிறது. 

புனித பிரான்ஸிஸ் அசிசி என்பவர் தான் கி.பி.1223-யில் முதன் முதலில் கிறிஸ்துமஸ் குடிலை வைத்ததாக வரலாறு கூறுகிறது. இத்தாலியின் கிரேச்சோ என்ற இடத்தில், தத்ரூபமான குடிலை அவர் அமைத்ததாக கூறப்படுகிறது. இது மாபெரும் வரவேற்பை பெற்றதால், நாடு முழுவதும் பிரபலமாகி பின்பற்றப்பட்டது.

பிறகு காலப்போக்கில் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் உருவங்கள் கிறிஸ்துமஸ் குடிலுடன் வைக்கப்பட்டன. மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது ஆட்சிக் காலத்தில் இந்நிகழ்வை அதிகமாகப் பிரபலப்படுத்தினார். இந்த மரபு இத்தாலி நாட்டைத் தொடர்ந்து உலகெங்கிலும் வரவேற்பைப் பெற்றது. 

சரி... கிறிஸ்துமஸ் பற்றிய சில உண்மைத் தகவல்களை தெரிந்துக் கொள்வோம்... 

Cristes Maesse என்ற வார்த்தை தான் பின் நாட்களில் Christ Mass என்றானது. 

டச்சு வாய் வழிக்கதையில் வரும் செயின் நிக்கோலஸ் என்பவர் தான் சான்டா கிளாஸ் எனும் கிறிஸ்துமஸ் தாத்தா! ஆனால் இவர் டிசம்பர் 6-ம் தேதி தான் பரிசுகளை வழங்கினாராம். 

ஜூலியன் காலண்டரின் படி கிரேக்கர்கள் கிறிஸ்துமஸை ஜனவரி 5-ம் தேதி கொண்டாடுவார்களாம். அதோடு கிறிஸ்துமஸ் பரிசுகளை புத்தாண்டு அன்று தான் திறப்பார்களாம். 

கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கிறிஸ்துமஸ் போனஸாக ஒரு மாத போனஸை வழங்க வேண்டும் என்பது சட்டம். 

இறை ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு படி ஏசு டிசம்பர் 25-ம் தேதி பிறக்கவில்லையாம். கி.மு 6-லிருந்து கி.பி 30-க்குள் செப்டம்பர் மாதத்தில் அவர் பிறந்திருக்கக்கூடும் என்பது அவர்களின் கூற்று. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close