தீபாவளி ரெசிப்பீ - சுவையான லட்டு ரெடி!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 12:41 pm
diwali-how-to-make-ladoo-at-home

தீபாவளிக்கு பலகாரங்கள் மிக முக்கியமானவை. அந்த தித்திப்பான நாளில் சுவையான லட்டு செய்து, இந்த வருட தீபாவளியை சிறப்பாக்குங்கள்!

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி பொடி - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கவும். கொதிக்கும் போது அதில், பால் மட்டும் கேசரி பொடி சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவுடன் நீர் சேர்த்து, பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை ஜார்னி கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை அந்த பாகு கலவையில் கொட்டிக் கிளறவும். பிறகு அதனை உருண்டையாக பிடிக்கவும். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close