தீபாவளி ரெசீப்பி - ஈஸியான அவல் மிக்ஸர்!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 12:34 pm
diwali-aval-mixture

தீபாவளிக்கு ஈஸியான அவல் மிக்ஸர் செய்வதைப் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்: கெட்டி அவல் – 250 கிராம், உப்பு – தேவைகேற்ப, மிளகாய்த்தூள் – தேவைகேற்ப, பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – சிறிது, பொரி கடலை – சிறிது, வேர்கடலை – சிறிது, எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, ஒரு தேக்கரண்டி அவலை முதலில் எண்ணையில் பொரித்து  எண்ணெய் சரியான சூட்டில் உள்ளதா என சரிபார்க்கவும். இப்பொழுது சிறிது, சிறிதாக அவலை எண்ணெயில் பொரித்து ஒரு பேப்பரில் பரப்பவும்.

தேவையற்ற எண்ணெயை பேப்பர் உறிஞ்சிவிடும். பிறகு, உப்பு, மிளகாய்த்தூளை நன்கு பொடித்து அவலுடன் சேர்க்கவும். பூண்டு, கறிவேப்பிலை,பொரிகடலை மற்றும் வேர்க்கடலை எண்ணையில் வறுத்து சேர்க்க சுவையும், மணமும் கூடும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close