பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற இருக்கின்ற இடங்கள்

  இரமேஷ்   | Last Modified : 30 Aug, 2018 05:22 pm
places-where-there-are-special-prayers-for-bakrid

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நபி(ஸல்) வழியில்,  பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற இருக்கின்றன.  

சென்னையில் இராயப்பேட்டை கபர்ஸ்தான் எதிர்புறத்தில், மாநகராட்சி விளையாட்டுத்திடலில் காலை 8 மணிக்கு பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது. பெண்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அஞ்சுமன் பள்ளிவாசலிலும் பெருநாள் சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புனித நாகூர் தர்கா. தர்காவில் உள்ள ஜும்மா நவாப்பள்ளியில் தொழுகை நடைபெறும்.

நாகூர் புதிய கடற்கரைப் பகுதி, நீடூர், கிளியனூர் உள்ளிட்ட இடங்களிலும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

மதுரை மஹபூப்பாளையம் பகுதியில் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது. பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பர்.

இதேபோல், கோரிப்பாளையம், நெல்பேட்டை, அவனியாபுரம், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

விழுப்புரம் மந்தக்கரையில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், தக்கா பள்ளிவாசல்கள்.

புதுக்கோட்டை ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.
திருச்சி ஈத்கா மைதானம், சையது முர்துஷா மைதானம், நத்தர்ஹலி தர்ஹாவில் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.
விருதுநகரில், பெரியபள்ளிவாசல், கல்பள்ளிவாசல், சின்னபள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.
ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close