நம்மாழ்வாருக்கு பரமபத வாசல் திறந்த எம்பெருமான்!

  கோமதி   | Last Modified : 28 Dec, 2017 06:38 pm


ஏகாதசி வைபவத்தின் போது, வைணவத் தலங்களில் பகல் பத்து ,இராப் பத்து உற்சவம் பிரசித்தம். அப்படியென்றால் என்ன என்பதைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வோமா ?. ஒரு திருவிழாவாகவே இதனை கொண்டாடுகிறார்கள் என்றால் மிகையில்லை. இந்த உற்சவத்தின் போது,பெருமாள் கோவிலின்  திருவிழா மண்டபத்தில் அலங்காரமாக எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலிப்பார். அப்போது  பெருமாளை தரிசித்த வண்ணமாக இரு புறங்களிலும் ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சார்யர்கள் வரிசையாக அமர்ந்திருப்பார்கள்.இந்த அற்புதமான காட்சியை காண கண்கோடி வேண்டும்.  

20 நாள்கள் மட்டுமே தரிசிக்க முடிகிற இந்த நிகழ்வின் போது  பெருமானுக்கு விதவித அலங்காரங்கள் செய்விக்கப்படும்.இந்த நாள்களில் தமிழ் வேதமான ஆழ்வார்களின் பக்தி சொட்டும் பாசுரங்கள், பகவத் ராமானுஜர் அமைத்த முறைப்படி அந்தணர்களால் ஓதப்பட்டு,முதல் பத்து நாட்கள் திருமொழித் திருவிழாவாகவும், அடுத்த பத்து நாட்கள் திருவாய் மொழித் திருநாள்களாகவும் கொண்டாடப்படும். இராப்பத்து திருநாளின் கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைந்ததாகவும், மீண்டும் உலகம் உய்யும் பொருட்டு திரு அரங்கன் அவரை நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் பக்தர்களின் தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கை.

பெரும்பாலான வைணவக் கோயில்களில் வடக்கு நோக்கி பரமபதவாசல் இருப்பதைக் காணலாம். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்பட்டு, இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்படி பெருமாளுடன் பரமபதவாசல் கடப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பாவங்கள் மலிந்த கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்ட ப்ராப்தம் யாருக்கும் கிடைக்காத காரணத்தால், வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும். நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று பரமபத வாசல் திறக்கப்பட்டது. 

நம்மாழ்வார், பெருமாளிடம் ,“எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்” என்றகோரிக்கையை வைக்க பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close