வைகுண்ட ஏகாதசி – புராண துளிகள்

  கோமதி   | Last Modified : 28 Dec, 2017 04:52 pm


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி போர் மூண்டுக் கொண்டிருந்த நிலையில், அழியா நிலை வேண்டி அமுதம் பெற இருவரும் இரவும்,பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தேவர்களுக்கு காட்சி அளித்தார். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

தனது வனவாசத்தின் போது, சீதையை ராவணனால் பிரிந்த ராமர், பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் வரும்  விஜயா என்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பலனாக வானர சேனைகளின் துணைக்கொண்டு கடலை கடந்து இலங்கேஸ்வரனை அழித்து இலங்கையை வென்றார். விஜயா என்னும் இந்த ஏகாதசி விரதம் நாம் கேட்ட பலன்களை கொடுக்கக்கூடியது.

ஒருவருடம் முழுவதும் சிரத்தையுடன் ஏகாதசி விரதம் இருந்த பலனால் அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் நமக்கு தெரிவிக்கின்றது. ஏகாதசி விரதமும் அதன் தொடர்ச்சியான துவாதசிப்பாரணையும் முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்து விளங்கிய துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

வைகுண்ட ஏகாதசி அன்று தான், குருக்ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ததால், இந்தநாள்  ‘கீதா ஜயந்தி' எனவும் கொண்டாடப்படுகிறது.

கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடுவதைக் கண்ட பெருமாள் காவலர்களிடம்‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டதால், மக்கள் மனதில் தர்ம சிந்தனை குறைந்து அதர்மம் தலைதூக்கும். பாவங்கள் பலவிதங்களில் பெருகும் சூழலில் மானிடர்கள் யாரும் வைகுண்டத்திற்கு வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

அதற்கு பெருமாள், “கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார்.ஏகாதசி விரதத்தை யார் ஒருவர் சிந்தனையில் பெருமானையும், மனதில் பக்தியையும் நிறுத்தி கடைப்பிடித்து பரமபத வாசலை கடக்கிறார்களோ அவர்களுக்கு வைகுண்ட வாசத்தில் கொடுத்தருளுவார் அரங்கன்.

ஓம் நமோ நாராயணாய...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close