வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு

  Sujatha   | Last Modified : 29 Dec, 2017 06:01 am


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதத்தின் போது வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் உகந்த தினமாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அப்போது கோவிந்தா, நாராயணா என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.


அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். பக்தர்கள் வெள்ளத்தில் பரமபத வாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் காலை 5.15 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். காலை 6.30 மணிக்கு சாதரா மரியாதை செய்யப்படுகிறது. காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அஙகு இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 12 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 30ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். நாலாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close