இந்து மதத்தின் தார்ப்பரியம்!

  கோமதி   | Last Modified : 05 Jan, 2018 10:16 am

நம்முடைய இந்து மதம் மிகவும் தொன்மையானது. பாரம்பரிய மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. நம் மதம் நமக்கு உணர்த்தும் விஷயங்கள் அநேகம். அதில் பொதிந்துள்ள தாத்பரியங்களும் அளப்பரியது. அவற்றைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? 

 நான்கு வகை உயிரினங்கள் : 

1. சுவேதஜம்

புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம்

 பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம்

முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4. ஜராயுதம்

கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

உலகத்தை தன்னுடைய பொன் கிரகணங்களால் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வரும் ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் : 

1. கர்ணன்  

2. காளந்தி 

3. சுக்ரீவன் 

4. தத்திய மகன் 

5. சனி 

6. நாதன் 

7. மனு 

ஈசனின் அருள் பெற்ற நந்தீஸ்வரரின்  அருள் பெற்ற எட்டுப்பேர் : 

1. சனகர் 

2. சனாதனர் 

3. சனந்தகர்  

4. சனத்குமாரர் 

5. வியாக்கிரபாதர்  

6. பதஞ்சலி 

7. சிவயோக முனிவர் 

8. திருமூலர் 

 

அஷ்ட பர்வதங்கள் : 

1. கயிலை 

2. இமயம் 

3. ஏமகூடம் 

4. கந்தமாதனம் 

5. நீலகிரி 

6. நிமிடதம்  

7. மந்தரம் 

8. விந்தியமலை 

மனிதனுக்கு என்று போதிக்கப்பட்ட ஆத்ம குணங்கள்:

1. கருணை 

2. பொறுமை 

3. பேராசையின்மை 

4. பொறாமையின்மை 

5. நல்லனவற்றில் பற்று [உறுதி] 

6. உலோபத்தன்மையின்மை  

7. மனமகிழ்வு 

8. தூய்மை 

மனை சிறக்க சொல்லப்பட்டுள்ள எண்வகை மங்கலங்கள் : 

1. கண்ணாடி 

2. கொடி 

3. சாமரம் 

4. நிறைகுடம் 

5. விளக்கு 

6. முரசு 

7. ராஜசின்னம் 

8. இணைக்கயல் 

 எட்டு வகை  வாசனைப் பொருட்கள் :

1. சந்தனம் 

2. கோட்டம்

3. கஸ்தூரி 

4. கற்பூரம் 

5. குங்குமம் 

6. பச்சிலை 

7. அகில்

8. விளாமிச்சை வேர் 


உயிரினங்களுக்கு பகுக்கப்பட்டுள்ள ஏழுவகைப் பிறப்புக்கள் : 

1. தேவர் 

2. மனிதர் 

3. விலங்குகள்  

4. பறப்பவை 

5. ஊர்பவை 

6. நீர்வாழ்பவை

7. தாவரம் 

ஈரேழு உலகங்கள் –மேல் உலகங்கள்

1. பூமி 

2. புவர்லோகம்

3. தபோலோகம் 

4. சத்யலோகம்

5. ஜனோலோகம் 

6. மஹர்லோகம்

7. சுவர்க்கலோகம்

 ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள் : 

1.அதலம்

2.கிதலம்

3.சுதலம் 

4. இரசாதலம்

5. தவாதலம்

6. மகாதலம்

7.பாதாலம்.

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் பொறுப்பில்  இருக்கும் நவநிதிகள் : 

1.சங்கநிதி

2.பதுமநிதி

3.கற்பநிதி 

4.கச்சபநிதி

5. நந்தநிதி

6. நீலநிதி 

7. மஹாநிதி

8. மஹாபதுமநிதி 

9. முகுந்த நிதி 

அஷ்ட ஐஸ்வர்யங்கள் : 

1. தனம் 

2. தான்யம் 

3. பசு 

4. அரசு 

5. புத்திரர் 

6. தைரியம்

7. வாகனம் 

8. சுற்றம் 

மனிதனுக்கு உவகையளிக்கும் எண்வகை போகங்கள் : 

1. அணிகலன் 

2. தாம்பூலம் 

3. ஆடை

4. பெண் 

5. பரிமளம் 

6. சங்கீதம் 

7. பூப்படுக்கை 

8. போஜனம் (உணவு)


நவ நாகங்கள் : 

1. ஆதிசேஷன்

2. கார்க்கோடகன்

3.அனந்தன் 

4. குளிகன் 

5. தஷன் 

6. சங்கபாலன் 

7. பதுமன் 

8. மகாபதுமன் 

9. வாசுகி

நன்மை தரக்கூடிய தச தானங்கள் : 

1. நெல் 

2. எள் 

3. உப்பு 

4. தீபம் 

5. மணி

6. வெள்ளி 

7. வஸ்திரம்

8.சந்தனக்கட்டை 

9. தங்கம் 

10. நீர்ப்பாத்திரம்

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட நம் இந்து மதத்தை போற்றி பாதுகாத்து நம்முடைய சந்ததியருக்கு கொடுப்போம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close