பூர்வ புண்னியங்கள் சேர்த்திடும் தை அமாவாசை

  கோமதி   | Last Modified : 16 Jan, 2018 01:15 pm


அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கியமானது  ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள். தை அமாவாசையன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜைகள்  செய்கின்றனர். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் திரள்கிறது. ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறுகிறது.

வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை. சூரியன் 'பிதுர் காரகன்', சந்திரன் 'மாதுர் காரகன்'. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் இணையும் அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் மிகுந்த புண்ணியம் சேர்ப்பவை.

 திருமணத்தடை நீங்கும்- நோய் விலகும் அமாவாசை வழிபாடு 

முன்னோரது ஆசி பெற, அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இதில் தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும். 

சனீஸ்வரருக்குரிய வாகனம்  காகம்

பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டில்  காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது ஐதிகம். நாம் வைத்த உணவை காகம் எடுத்து உண்ணாவிட்டால் நம் முன்னோர் வருத்தமாக உள்ளனர் என்று கருதுவது நம் மக்களின் எண்ணமாக உள்ளது.

பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஏழைகளுக்கு  ஆடை, உணவை தானமாக கொடுக்க வேண்டும்.

தை அமாவாசை வழிபாடு நம் வாழ்வில்  அளவற்ற நன்மைகளை தரும்.  . தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் நீங்கும்.உள்ளத்திலும் , இல்லத்திலும் படிந்திருக்கும் துயர கருமை , ஆரோக்கிய குறைவு போன்ற இருள் நீங்கிட அமாவாசை வழிபாடு வழி வகுக்கும். நம் முன்னோர் ஆசி பெற அமாவாசை வழிபாடை செய்வோம். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றி வஸ்த்ர தானம் செய்வோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.