அனேக பலன்களை தரும் லிங்க வடிவங்கள்

  கோமதி   | Last Modified : 13 Feb, 2018 05:03 pmசிவ பெருமானை லிங்க வடிவில் தான் நாம் வணங்கி வருகிறோம். மஹா சிவராத்திரி நாளில் எத்தகைய லிங்கங்களை வழிபட்டால், எத்தகைய பலன்களை நாம் அடைய முடியும் என்பதை தெரிந்துக் கொள்வோமா?

புற்று மண் லிங்கம்  நமக்கு பாபங்களில் இருந்து விடுதலை அளித்து மோட்ச பெருவாழ்வு அளிக்கும்.  

ஆற்றுமணல் லிங்கத்தை பூஜிப்பதால், பூமி சம்பத்தப்பட்ட விஷயங்களில் நமக்கு அதிக லாபத்தை கொடுக்கும்.

பச்சரிசியால் ஆன லிங்கத்தை பூஜிப்பதால், திரவிய போகங்கள் கிட்டும்.

அன்னலிங்க பூஜை அன்ன விருத்தியை தரும்.

கோமய லிங்கம் தீராத வியாதியையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் மிக்கது.   

வெண்ணெயால் ஆன லிங்கம் மனமகிழ்ச்சி தரும்

ருத்ராட்ச லிங்கம் வணங்குபவருக்கு  ஞான விருத்தி சித்திக்கும்.

 விபூதிலிங்கம் பூஜிப்பவர்களுக்கு வாழ்க்கையின் சகல சௌபாக்கியமும் ப்ராப்தியாகும். 

சந்தனத்தினால் ஆன லிங்கம், சகல இன்பத்தையும் அள்ளித்தரும். 

புஷ்ப லிங்க வழிபாடு, ஆயுள் விருத்தியை கொடுக்கும்.

சர்க்கரை லிங்கம் வணங்குபவருக்கு, சர்க்கரையின் இனிமையைப் போல விரும்பிய இன்பங்களெல்லாம் கிடைக்கும். 

மாவு லிங்கம் உடல் வலிமை தரும்.

பழ லிங்கமானது வணங்குபவர்களுக்கு சுகத்தைத் தரும்.

தயிர் லிங்கம், வேண்டுபவர்களுக்கு நல்ல குணத்தைத் தரும்

தண்ணீர் லிங்கம் சகல மேன்மைகளையும் தரும்

தர்ப்பைப் புல் லிங்கம், சகல ஐஸ்வரியங்களையும் கொடுக்கும். 

களிமண் லிங்கம்  மனச்சாந்தியையும், பசுஞ்சாண லிங்கம் நோயில்லா ஆரோக்ய வாழ்வினை தரும். 

எம்பெருமான் ஈசனை சிவராத்திரி நன்னாளில் வணங்கி எல்லா நலன்களையும் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close