ராகு கால துர்க்கை பூஜை - தெரிந்ததும்... தெரியாததும்!

  கோமதி   | Last Modified : 03 Apr, 2018 04:59 pmஎதிரிகள் மீதான பயமில்லாத வாழ்க்கை வேண்டுமா? அப்படியென்றால் வணங்கப்பட வேண்டிய தெய்வம் துர்க்காதேவி.

இவளை வழிபட ஏற்ற  நாட்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை. அதிலும் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல்4.30 வரையிலான ராகு கால பூஜை, துர்க்கைக்கு மிகவும் உகந்தது. கிரக தோஷம் நீங்கி, வீட்டில் எப்போதும் சர்வ மங்களமும் நிறைந்திருக்க செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜைக்கு அன்னைக்கு செவ்வரளிப் பூவைக் கொண்டு பூஜை செய்திட கை மேல் பலன் கிட்டும்.

அன்னையின் பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகையை விரட்ட இன்னும் ஒன்று செய்ய வேண்டும். அது பழங்களில் தேவ கனி என்று போற்றப்படும் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது. மற்ற  பழங்களில் இருக்கும் தோஷம் எலுமிச்சைப் பழத்திற்கு இல்லை என்பதாலும், மனிதனுடைய எண்ண அலைகளை  ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கு அதிகம் உண்டு என்பதாலும் துர்கையின்  ராகு கால பூஜைக்கு எலுமிச்சை கனி தான் சிறந்தது. பூஜைக்காக தேர்ந்தெடுக்கும் போது, நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த பழமாக இருப்பது  அவசியம்.

பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தையும், பின் எலுமிச்சை மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தையும் சொல்லி, பஞ்சு திரியை இட்டு, அதில் எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த விளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

இதன் பொருளாவது: ஐம் - சரஸ்வதி, க்ரீம் - லட்சுமி, க்லீம் - காளி, சாமுண்டாய விச்சே -  சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என்பதாகும். விளக்கேற்றிய பின்,கோயிலை ஒன்பது அல்லது இருபத்தியோரு  முறை வலம் வருவது ஆகச்சிறந்த பலனைக் கொடுக்கும்.

இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது, ஒரே ஒரு எலுமிச்சை விளக்காக  ஏற்றாமல் ஜோடியாகத் தான் ஏற்ற வேண்டும். துர்க்கை அம்மனின் கவசத்தையும் அஷ்ட்ரோத்திரத்தையும் பாராயணம் செய்வது, தேவியின் அருளை எளிதாக நாம் பெறுவதற்கு வழி வகுக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close