வீட்டில் மங்களம் பொங்க,வாசல் தோறும் மாவிலை கட்டுவோம்.

  கோமதி   | Last Modified : 09 Apr, 2018 06:46 pmமங்கல நிகழ்ச்சிகளில்  சில பொருள்களுக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் உண்டு. மஞ்சள், குங்குமம், விபூதி, மஞ்சள் தூள் கலந்த அரிசி, தர்ப்பைப் புல், மாவிலை போன்றவைகளே அந்த  மங்கலப் பொருட்கள். 

இந்த மங்கலப் பொருட்கள் பட்டியலில் அவசியம் இடம் பெறுவது மாவிலைத் தோரணங்கள். சில இடங்களில்  தோரணம் கட்ட வாய்ப்பும் ,  நேரமும் இல்லாவிட்டாலும் , ஒரு கொத்து மாவிலையை நிச்சயமாக செருகி வைத்திருப்பார்கள்.

பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலையை கொண்டு  கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர். மாவிலைக்கு கிடைக்கும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில்  அடங்கியிருக்கிறது  ஒரு தகவல். அது  லட்சுமி தேவி  மாவிலையில் வசிக்கிறாள் என்பதே. அதனால்தான் மாவிலையை அதிக அளவில்  மங்கலப் பொருளாக  பயன்படுத்துகிறார்கள். மாவிலைக்கு இன்னொரு சக்தியும் உண்டு. மரம், செடி, கொடிகள் காற்றில் கலந்து கிடக்கும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்ற அற்புதத்தை மாமரங்கள் செய்கின்றது. மனிதனுக்கு  தேவையான ஆக்சிஜனை அள்ளித்தருகிறது மாமரங்கள்.

பொதுவாக இலைகள் மரம் அல்லது செடிகளில் இருந்து பிரித்து எடுத்த பிறகு அதன் உயிரோட்டத்தை இழந்து விடும் . ஆனால் மாவிலைகள் நீண்ட நேரத்துக்கு உயிரோட்டமாக இருந்து  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி கொண்டது . இப்படி ஆரோக்கியத்துக்கு உகந்ததாக திகழ்கிறது  மாவிலை.

ஒவ்வொரு 21 நாளுக்கொருமுறை வீட்டில் மாவிலை தோரணம் கட்டினால் அந்த வீட்டிற்கு வாசம் செய்திட மகாலட்சுமி வாசல் தேடி வந்து அருள்பாலிப்பாள்.

பூஜை புனஸ்காரங்களில் மாவிலைக்கு முக்கிய பங்கு உண்டு. மாவிலையின் மகத்துவமே அதனை மங்களகரமான விஷயங்களுக்கும் விசேஷங்களுக்கும் பயன்படுத்தும் காரணமாக அமைகிறது. மாவிலை இன்றி கும்பமும் கலசமும் இல்லை. கோவில்களிலும், நாள் கிழமைகளில் வீட்டின் வாயிர்புறதிலும் மாவிலை தோரணங்கள் கட்டுகிறோம். அதற்க்கு மஞ்சள் குங்குமம் இடுகிறோம்.வீட்டை சுற்றி மாங்கன்றுகள் நட்டு மரம் ஆக்குகின்றோம்.மாமரம் இருக்கும் வீடு சுபிட்சங்கள் நிறைந்து இருக்கும். மாவிலையை மரத்திலிருந்து கொய்த  பின்பும் வெகு நேரம் ஆக்சிஜனை வெளியிட்டு கொண்டு இருக்கும். எளிதில் காய்ந்து விடாத தன்மை கொண்டது மாவிலை.

முக்கிய நிகழ்வுகளில் , வீட்டு  விசேஷங்களில்  மாவிலை தோரணம் கட்டுவதன் மூலம்  வீட்டிற்குள் அதிகமாக குழுமியிருக்கும் மக்கள் வெளியிடும்   கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்சிஜன்  வாயுவை வெளியேற்றி மக்களை உற்சாகமாக வைத்திருக்கிறது.

மாவிலை காற்றை சுதம் செய்து தூய்மை படுத்தி புதிய உற்சாகத்தை கொடுக்கும் அதே வேளையில் மஞ்சள் பொடி கொண்டு போட்டு வைப்பது வீட்டினுள் சிறிய சிறிய பூச்சிகளும் விஷ ஜந்துகளும்  வராமல் தடுக்கின்றது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதாலும் மாவிலையும் மஞ்சளும் வீட்டிற்க்கு களை சேர்ப்பதுடன் நம்மை பாதூகாக்குகிறது.

மாவிலை நம் வீட்டிற்கு மங்கலம் சேர்ப்பதுடம் ஆரோக்கிய வாழ்க்கைக்கும் துணை நிற்கிறது. வாசல் தோறும் மாவிலை கட்டுவோம்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close