கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த ரங்கன்

  கோமதி   | Last Modified : 02 May, 2018 11:07 am


இந்து மதம் கடவுளையும் பக்தனையும்  தொலை தூரத்தில் தள்ளி வைக்கவில்லை. பக்தர்களைப் பக்கத்தில் வைத்து பரவசப்படுத்தும் பகவான் இங்கு உண்டு. ஈசனின் திருவிளையாடல்களும் எம்பெருமான் பெருமாளின் பல சம்பவங்களுமே இதற்கு மெய் சாட்சி. சூடி கொடுத்த சுடர் கொடி ஆண்டாளை தன்னகத்தே பெருமாள் ஏற்றுக் கொண்டது வரலாறு. இதற்கு சாட்சியாக நின்ற அழகருக்கு இன்றைக்கும் அக்காரா அடிசல் படைக்கப்படுகிறது. சாதிப் பிரிவினைகள் பார்க்காமல் இந்து தர்மத்தை நிலைநாட்டிய  ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த அற்புத மண் இது.

பக்தை ஒருவர் வீட்டில் பெருமாள் ஸ்ரீரங்கநாதர் கீரை உணவு உண்ட சம்பவம் ஒன்றை நம்மை நெகிழச்செய்கிறது. 

ஒரு தாயும் பிள்ளையும் மட்டுமே இருக்கும் ஏழைக் குடும்பம்.பையன் வேதம் படித்து வருவதற்காக ஒரு பள்ளியில் சேர்க்கப் படுகிறான்.15 நாளைக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து அம்மா கையால் எண்ணை தேய்த்துக் கொண்டு காவேரிக்குப் போய் தோழர்களுடன் கும்மாளம் போட்டு விட்டு வருவானாம்.

அப்படி ஒரு தடவை  வீட்டுக்கு வந்த போது அம்மாவிடம் ஆசை ஆசையாகக், கீரை சமைக்கச் சொல்லிவிட்டு ஓடி விட்டது அந்தப் பையன்.அம்மாவும் சுடு சாதம் செய்து, சட்டியில் நல்ல அரைக் கீரையைச் சுத்தம் செய்து,வாசனையாகப் பெருங்காயம், கடுகு தாளித்து மசித்து வைத்துக் காத்திருக்கிறாள்.

குளிக்கப் போன பையனைக் காணோமே என்று கதவுக்கும் உள்ளுக்குமாக நடக்கிறாள்.

நீச்சலில் சூரன் பையன். ஆட்டம் போடாமல் திரும்ப மாட்டான், எல்லாம் தெரியும்.இருந்தாலும் நேரத்தோடு சாப்பிட்டால் தேவலையே என்று ரங்கா ரங்கா என்று அன்னை ஸ்ரீ ரங்கனை கூப்பிடுகிறாள்.

“கீரை செய்து இருக்கேண்டா, சீக்கிரம் வா”ன்னு வேற அழைக்கிறாள். அந்தப் பிள்ளை காதில் விழுந்ததோ இல்லையோ. நம் பள்ளிகொண்ட பெருமாள் காதில் விழுந்துவிட்டது.

அவருக்குக் கீரை சாப்பிட ஆசையாம்.உடனே எழுந்து இந்த ஏழைத்தாய் வீட்டு வாசலில் அவள் மகன் போலவே வந்துவிட்டார்.மகனைக் கண்டதும் அம்மாவுக்குக் கோபம் இருந்தாலும், 'பாவம் பிள்ளை பசியோடு இருப்பான்' என்று வாடா உள்ளே என்று கையைப் பிடித்து அழைத்துஆசனம் போட்டு, சரகு இலையில் சுடச்சுட அமுது பரிமாறுகிறாள்.மகனாக  வந்த பெருமாளும் கீரையும் சோறுமாக ,அத்தனை சோற்றையும் சாப்பிட்டுவிட்டு,அம்மா உனக்கு இல்லையே என்கிறான். அவளுக்கோ மகன் சாப்பிடுவதைப் பார்த்தே வயிறு நிரம்பிவிட்டது. “இன்னிக்கு விரதம்”ன்று சொல்லி விடுகிறாள்.

பையனும் வெளியே ஓடிவிட, காவிரியில் ஆட்டம் போட்ட பிள்ளை வருகிறான் பசியோடு. களைப்பாகப் பசியோடு படுத்திருக்கும் அம்மாவை எழுப்பி,“அம்மா எங்கே கீரை?” என்கிறான். அம்மா,“நீதானே இப்ப சாப்பிட்டுப் போனியேப்பானு”குழம்புகிறாள். “நேரத்தோடு வரலை அம்மா . நண்பர்கள்  எல்லாம் சேர்ந்து குளித்ததில் நேரம் ஆகிவிட்டது.பசிக்கிறதும்மா” என்று சொல்லும் பிள்ளையைப் புரியாமல் பார்க்கிறாள்.

அடுக்களையில் சட்டி அலம்பிக் கவிழ்த்தாச்சு. இது என்ன நான் சொப்பனம் கண்டேனா என்று மீண்டும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீரைப் பாத்தியிலிருந்து இலைகள் கிள்ளி மறுபடியும் சமைக்கும்போது, வந்தப் பையனை நினைக்கிறாள்.

எப்போதுமே அம்மாவைப் பார்த்து ' நீ சாப்பிட்டியானு கேக்காத பிள்ளை, உனக்கு இல்லியேம்மா'னுகேட்டுதே என்று நினைக்கும் போதே அவளுக்குப்புரிந்தது,வந்தது யார் என்று.கண்ணில் நீர் பெருக ரங்கனின் கோபுரத்தைப் பார்த்துக் கைகூப்புகிறாள் அந்த தாய்.அழைத்த உடனே வந்தியா ரங்க ராஜா'' என்று மனம் குழைந்துஅழுகிறாள். 

தெய்வங்கள் ஒரு நொடியும் நம்மை விட்டு விலகுவதில்லை. இறுக இறைவனின் பாதாரவிந்தங்களைப் பிடித்துக் கொண்டால் நமக்கு விமோசனம் நிச்சயம் உண்டு.

"ஸ்ரீ ரங்கநாதன் திருவடிகளே சரணம்"


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close