இன்றைய அமாவாசை ஏன் முக்கியம் தெரியுமா?

  கோமதி   | Last Modified : 17 Mar, 2018 12:51 pmஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும்,இன்றைய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனிக்கிழமையன்று வரும் அமாவாசைக்கு மகத்துவம் அதிகம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். இன்றைய தினம் சனி பகவானுக்கு உரிய எள்தீபம் ஏற்றி வழிபட்டால்,முன்னோர்களின் ஆசியுடன் சனீஸ்வரரின் ஆசியும் நமக்கு கிட்டும். நம் முன்னோர்களை நினைத்து அவர்கள் ஆசிபெற  அமாவாசை அன்று செய்யப்படும் தர்ப்பணம்,நம் தலைமுறையை வாழ வைக்கும்.

மேலும் வசந்த நவராத்திரி இந்த பங்குனி அமாவாசை அன்றில் இருந்து தான் துவங்குகிறது. 

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், நம்மால் இயன்ற அளவு உணவை தானம் செய்யலாம். புண்ணியத் தலங்களில் உள்ள  கடலில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்வது நம்மை தொடர்ந்து வரும் பாவங்களில் இருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் கவசம் போல் காக்கும்.  மேலும் அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட சுத்தமான  நீரை வீட்டுக்குக் கொண்டு வந்து தீர்த்தமாகத் தெளிப்பதால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

இவை எதையுமே செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்களையோ அல்லது அகத்திக்கீரையையோ கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் ஒரு சின்ன நன்றி கடன் இது.  

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினத்தன்று  அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்யலாம். அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது,போன்ற நியதிகளை கடைப்பிடித்தல் நலம். அமாவாசை வழிபாட்டை தந்தையர் இல்லாத ஆண்களும், மாமனார் இல்லாத பெண்களும் மட்டுமே செய்ய வேண்டும்.

நமது முன்னோர்களை நாம் நினைத்துவணங்க கிடைத்த அற்புத சந்தர்ப்பமாக கருதி அமாவாசை வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்போம்.

வாழ்வின் நலன்களை பெறுவோம்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close