வாழ்வில் வசந்தம் வீச வேண்டுமா...? இன்று வசந்த பஞ்சமி – சில தகவல்கள்

  கோமதி   | Last Modified : 22 Mar, 2018 03:56 pm


வளர்பிறையில் வரும், பஞ்சமி திதி சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப்படுகிறாள் சரஸ்வதிதேவி.

உலகத்தில் உயிர்களை சிருஷ்டித்து முடித்த பிரம்ம தேவன் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்படுவதை நீக்கிக் கொள்ளும் வகையில், வசந்த பஞ்சமி நாளன்று சரஸ்வதி தேவியைப் படைத்ததாக வேதங்களும், புராணங்களும் கூறுகிறது.  

வசந்த பஞ்சமி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கிட, வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கம், அறிவு, இசை, வாக்கு வன்மை, போன்ற குணநலன்கள் நமக்கு கிடைக்கும். உலகிற்கு கீதையை உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணர், வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலைகளைக் கற்றதாக புராணங்கள் கூறுகிறது.

மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்திலும், வசந்த பஞ்சமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வசந்த ருது ஆரம்பிக்கும் தருணம் என்பதால், காணும் இடமெல்லாம் பசுமையாக காட்சியளிக்கும்.

இவ்வளவு சிறப்புமிக்க, இந்த  வசந்த பஞ்சமி நாளில், சரஸ்வதி தேவியின் படத்தை மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கலாம். அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் நிச்சயம் வசந்தத்தை கொண்டு வருவாள் அம்பிகை. மேலும் பஞ்சமி திதிகளில், சக்தி வழிபாடு கூடுதல் பலன்களைத் தரும். வசந்த பஞ்சமியில், அம்பாளை மனம் உருகி வணங்குவதும் அர்ச்சிப்பதும்  எல்லா நலன்களையும் அளிக்க வல்லது.

இயன்றவர்கள் இந்த நாளில், காலையில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி, அன்னையை வசீகரிக்கும் அபிராமி அந்தாதி மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யலாம். நம் வாழ்வை இனிமையாக்கும் அன்னைக்கு மணக்க மணக்க சர்க்கரைப் பொங்கல், பால் பாயசத்தை நைவேத்தியமாக  படைக்கலாம். இன்னும் அதிக பலன்கள் கிடைக்க, கோயில்களுக்குச் சென்று செவ்வரளி மாலை சார்த்தி, நெய் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடலாம்.

என்றைக்குமே பசியால் வாடி வருந்துபவர்களுக்கு கொடுக்கப்படும் அன்னமானது நமக்கு இன்னும் மேன்மையை தரவல்லது. இத்தகைய சிறப்புமிக்க நாளில் செய்யப்படும் தானமானது மேலும்  பல நன்மைகளை நம் இல்லம் தேடி கொண்டு வந்து சேர்க்கும்.

வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரும் இந்தப் பஞ்சமியில், அன்னையை உபவாசித்து மேன்மை அடைவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close