குழந்தை பேச தாமதமாகிறதா ...? இந்த ஸ்பீச் தெரப்பிஸ்டிடம் அழைத்து வாருங்கள்

  கோமதி   | Last Modified : 04 Apr, 2018 12:20 pmஇன்றைய நாகரீக உலகில் குழந்தைகளுக்கு சரியாக நேரம் தராமல் கையில் செல் போன்களையும் ஐ பேடுகளையும் கொடுத்து விடுகின்றனர் பெற்றோர்கள். தங்களோடு பேச யாரும் இல்லாத நிலையில், உரிய நேரத்தில் பேச்சு வராமல் தடுமாறுகின்றனர் இக்கால குழந்தைகள். உடனே ஸ்பீச் தெரப்பி அது இது ஏது என்று அலைய தொடங்குகின்றனர் பெற்றோர்கள். ஆனால் காலங்காலமாக மிகப் பெரிய ஸ்பீச் தெரபிஸ்ட்டாக அருள் பாலித்து வருகிறார் இன்னம்பூர் எழுத்தறிநாதர்.

பல மருந்துகள் மாயங்கள் பலனளிக்கவில்லையே என்று ஏங்கும் பெற்றோர்கள் எங்கும் செல்லாமல்,  கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலுக்கு அழைத்து செல்லலாம். பேச்சு சரியாக வராத குழந்தைகளையும், பேசத் தயங்கும் குழந்தைகளையும்  இங்கு அழைத்து வந்து அர்ச்சனை செய்தால் அவர்கள் நன்கு பேசும் திறன் அடைவார்கள் என்பது  நம்பிக்கை.

பேச்சு வல்லமைக்காக மட்டுமின்றி,குழந்தைகளுக்கு படிக்கும் திறன் நன்றாக இருக்கவும், கையெழுத்து திருந்தவும் கூட இக்கோவிலுக்கு குழந்தைகளை ,பெற்றோர்கள் அழைத்து வருவதை பார்க்க முடிகிறது.  இதற்கு பின்னால் இருக்கும் புராண கதையை தெரிந்துக் கொள்வோம்.

இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர், தனது கணக்கு பிள்ளையை கோவில் கணக்குகளை எடுத்து வருமாறு பணித்தார்.

ஆனால் கணக்கு பிள்ளையோ, கணக்கை சரிவர எழுதி முடிக்காததால்,எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே சன்னதியில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிச்சென்றார். ஆனால் மறுநாள் காலையில் அரசர் கணக்கு பிள்ளையை அரண்மனைக்கு அழைத்து பாராட்ட, கணக்கு பிள்ளையோ எதுவும் புரியாமல் முழித்தார்.

இதுவரை பார்த்த கோவில் கணக்குகளிலேயே உங்களுடைய கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர். கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார். அதில் இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

 தனக்காக சிவபெருமானே அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர், இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்ததோடு கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி நின்றார். அன்று முதல், அங்கு வீற்றிருக்கும் சிவனுக்கு  எழுத்தறிநாதர் என்று போற்றப்பட்டார்.

இத்திருக்கோயிலில் , பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில் எழுதுகிறார்கள்.இப்படி செய்வதால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் இங்குள்ள ஆன்மீக பெரியவர்கள்.   


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close