மஹா பெரியவரின் தாகத்தை தீர்த்த அந்த சிறுமி யார் ?

  கோமதி   | Last Modified : 05 Apr, 2018 07:01 pmநாம் வாழும் காலத்திலேயே நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகான், பாத யாத்திரையாக சென்று தனது பக்தர்களை சந்திப்பது வழக்கம். அப்படி ஒருநாள், காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். அப்படி வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும்,திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார்.

வரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள நினைத்து, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் தாகம் எடுக்க தனது சிஷ்யர் ஒருவரிடம் தண்ணீர் கொண்டு வர  அழைத்தார். மகா பெரியவா கேட்டது சிஷ்யர் காதில் விழவில்லை.

சிறிது நேரத்திற்கெல்லாம், தெய்வாம்சம் பொருந்திய ஒரு சிறுமி, கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்....தண்ணீர் கேட்டீர்களே"என்று கூறி கொடுத்தாள்.அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை.

உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தை கூறி, "யார் அந்த சிறுமி,தண்ணீரை நீங்கள்தான்சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்க, அவர்களோ, "இல்லையே...அந்த சிறுமி யாரென்றே தெரியாது" என்று வியப்புடன் கூறினார்கள்.

இதை தொடர்ந்து மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார்.வந்தது சாட்சாத் லோகமாதாவான அந்த அம்பிகை,ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உணர்ந்துக் கொண்டார்.

அன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும்,ஊர் மக்களையும் அழைத்து,"இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள்.உடனே தோண்டி கண்டுபிடியுங்கள்"என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார்.


மகா பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும்,தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது.


இந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது.அவரும் மகிழ்வுற்று,அந்த இடத்தில்திரும்பவும் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு 'ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற திருநாமத்தை வைத்தார்.


ஜெய ஜெய சங்கர ......

ஹர ஹர சங்கர ........


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.