தீர்க்க சுமங்கலி பவா - வாழ்த்தும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

  கோமதி   | Last Modified : 16 Apr, 2018 05:48 pm


சுபமங்கள நிகழ்சிகளில் பெரியவர்களிடம் ஆசி வாங்கும் போது நமது காதுகளையும், மனதையும் நிறைக்கும் அற்புதமான ஆசிர்வாதச் சொல் ‘ தீர்க்க சுமங்கலி பவா’ இந்த ஆசிர்வாதம் பெற வேண்டும் என்பதே சத்யவான் சாவித்திரி காலம் தொட்டு இன்றளவும் பெண்களின் பெரும் விருப்பமாக உள்ளது.

வாழ்க்கையின் ஐந்து முக்கிய காலகட்டங்களில் மாங்கல்ய பலத்துடன் இருக்கவேண்டும் என்று ஆசி வழங்குவதே தீர்க்க சுமங்கலி பவா என்பதன் அடிப்படை பொருள்.  அதாவது கணவனிடம் இருந்து மனைவி தனது வாழ்நாளில் ஐந்து முறை  மாங்கல்யம் பெற வேண்டும் என்பதே அதன் பொருள் .

கணவனிடம் மனைவி 5 மாங்கல்யம் பெற வேண்டிய காலங்கள் எவை ?

முதல் மாங்கல்யம்  திருமணத்தின் போது உற்றார் உறவினர் ஆசியுடன் கழுத்தில் ஏறுகிறது. வாழ்க்கையின் முதல் பிணைப்பின் சாட்சியாகிறது மாங்கல்யம்.

அடுத்த மாங்கல்யம் கணவரின்  60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியின் போது கழுத்தில் ஏறுகிறது. இதனாலேயே இந்த நிகழ்வுக்கு 60 ம் கல்யாணம் என பெயர் ஏற்பட்டது. மூன்றாவது மாங்கல்யம்  70 வயது பீமரத சாந்தியில் கழுத்தை அலங்கரிக்கிறது. நான்காவது மாங்கல்யம் 80 வயது சதாபிஷேகத்தில் பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் என 2 தலைமுறை வாரிசுகளின் மகிழ்ச்சி ததும்ப அவர்கள் முன்னிலையில் கணவர் மனைவிக்கு அணிவிக்கிறார்.


இதை காண்போருக்கு பெரும் புண்ணியம்  கிடைக்கிறது. இதை விட பெரும் பாக்கியமான நிகழ்வு  96 வயது கனகாபிஷேகம் . இந்த வைபோக நிகழ்ச்சியில் தான் ஐந்தாவது மாங்கல்யத்தை கணவரிடம் இருந்து மனைவி பெறுகிறார். மிக நிறைவான வாழ்க்கை என்பதின் உச்சம்  இது தான். இந்த பெரும்பேறு எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தீர்க்க சுமங்கலி பவா என்ற ஆசியின் உள்ளடக்கப் பொருள்.

பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமையும் இந்த மகிழ்வு தரும் மங்கல நிகழ்வுகளில் , சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு  வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடத்தப் பெறுகின்றது. 

60  வயதில் சஷ்டியப்த பூர்த்தி , 70 ல் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம். 96 வயதில் கனாகாபிஷேகம் என பெரும் பாக்கியம் செய்த பெரியவர்கள் , இந்த சுப நிகழ்சிகளின் போது கூடும் உற்றார் உறவினர்களை பார்க்கும் போது மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து ஆசிர்வதிக்கிறார்கள்.  


ஐந்து மாங்கல்ய புண்ணியப் பலன் பெற்ற தம்பதியினர் பெரும் பேரானந்த்ததின் போது  அவர்களின் மனதில் 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளதாக அமைகிறது.

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும்,செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும்,புதனுக்கு ஒரு வருடமும்,வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும்,சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. 


இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த  வாழ்வில் பெரியோரிடம் இனி பெரும் தீர்க்க சுமங்கலி பவா என்ற ஆசி நம்மை நீண்ட நெடுங்காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்ற  பொருள் பொதிந்த நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்வோம்.


தீர்க்க சுமங்கலி பவா


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close