எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமை பைரவரை வழிபடலாம்

  கோமதி   | Last Modified : 24 Apr, 2018 07:39 am


படைத்தல், காத்தல், அழித்தல் என்று முத்தொழிலையும் செய்பவர் பைரவர். அதர்ம வழியில் எதிரிகளை துவம்சம் செய்பவர் பைரவர். மனதில் தோன்றும் தேவையில்லாத பயத்தை நீக்கி, பாபத்தை போக்கும் பைரவரருக்கு உகந்ததாக தேய்பிறை அஷ்டமி குறிக்கப்படுகிறது.

ஈசனிடம் இருந்து பெற்ற வரத்தினால், அந்தகாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினான். வழக்கம் போல், தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்தனர். தேவர்களை அசுரனிடமிருந்து காக்கும் பொருட்டு, தனது நெற்றிக்கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார். அவரிடமிருந்து அஷ்டபைரவர்களும், 64 குட்டி பைரவர்களும் தோன்றி அந்தகாசுரனை அழித்தனர்.

நம்மை பகைவர்கள் நெருங்கா நம்மை பாதுகாக்கும் பைரவரை, திங்கள் முதல் ஞாயிற்று கிழமை வரை உள்ள நாட்களில் பைரவருக்கு விரதமிருந்து வழிபட்டால், அனைத்து விதமான தடைகளும் அகலும்.

திங்கள் முதல் ஞாயிற்று கிழமை வரை உள்ள நாட்களில் பைரவருக்கு விரதமிருந்து வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் அகலும்.

ஞாயிற்றுக்கிழமை: சிம்ம ராசிக்காரர்களுக்கான கிழமை இது. திருமணம் வேண்டி விரதம் இருப்போர்,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 4.30–6.00 வரையிலான ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை மற்றும்  ருத்ராபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணம் கைகூடும். கடனில் தத்தளிப்பவர்கள், இராகு காலத்தில் கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டால், பலம் கிடைக்கும்.

திங்கட்கிழமை: கடக ராசிக்காரர்களுக்கு ஏற்ற கிழமையான இன்று, அவர்கள் வில்வார்ச்சனை செய்ய சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை மற்றும் சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்தால்  எப்படிப்பட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்களும்  விலகும்.

செவ்வாய்க்கிழமை: மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில்  பைரவரை, மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வருவது மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதன்கிழமை: மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் பைரவரை புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், பூமி லாபம் கிட்டும்.

வியாழக்கிழமை: தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை: ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிகிழமையில் மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பைரவரை வழிபடுவது வறுமை நீங்கி, செல்வப் பேறு கிடைக்க செய்யும் வழிமுறையாகும்.

சனிக்கிழமை: மகரம், கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். பைரவர், சனி பகவானுக்கு குரு என்பதால் சனிக்கிழமைகளில் பைரவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாக சொல்லபடுகிறது.

பகைகள் ஒழித்து வாழ்க்கையை மலரச்செய்யும் பைரவர் வழிபாட்டை தொடர்வோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close