பிறவியில்லா பெருவாழ்வு கிடைக்கும் சித்திரை திருவோணம் இன்று!

  கோமதி   | Last Modified : 07 May, 2018 03:55 pm


ஆடல் வல்லான் என்றும், கூத்தபிரான் என்றும் போற்றப்படும் நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறது  ஆகம விதிகள். விரிவாக சொல்ல வேண்டும் என்றால், மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.

அதிலும் ‪ மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ‪ஆனி உத்திர நட்சத்திர நாட்கள் மிகச்சிறப்பானது. இது தவிர ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மனிதர்களின்  ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் கணக்கு.  அவர்கள் இறைவனுக்கு ஆறுகால பூஜையை நாள்தோறும் செய்துவருகிறார்கள். பொற்சபையில் ஆடும் எம்பெருமானாருக்கு உரிய அபிஷேக தினங்கள் என்னவென்று பார்க்கலாம்.

மார்கழி மாதத்தில் வரும்  ‪‎திருவாதிரை நட்சத்திரம்  தேவர்களின் அதிகாலை பூஜை.

‪மாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி திதி,தேவர்களின் காலை சந்தி பூஜை.

சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம்,தேவர்களின் உச்சிக்கால பூஜை. 

ஆனி மாதத்தில் வரும்  ‪‎உத்திர நட்சத்திரம்,தேவர்களின் சாயங்கால பூஜை. 

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி திதி,தேவர்களின் இரண்டாம் கால பூஜை. 

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி திதி, தேவர்களின் அர்த்தஜாம பூஜை. 


இன்று சித்திரை மாத திருவோண நட்சத்திரம். இன்று செய்யப்படும் அபிஷேகம், உச்சி கால அபிஷேகம் எனப்படும். புகழ்ப்பெற்ற தலமான சிதம்பரத்தில், பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் ஆடலரசனுக்கு இன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மகா தீபாராதனை செய்விக்கப்பட்டு, பின்னர் நடராஜர் அலங்கரிக்கப்படுவார்.

ஆண்டுக்கொரு முறை வரும் சித்திரை உச்சி கால அபிஷேகத்தைத்  தரிசித்தால், எம்பெருமான் ஈசனின் திருவருளால் மறு பிறப்பிலா பிறவி பேரின்பத்தை அடையலாம் என்பது நம்பிக்கை.

சிதம்பரம் மட்டுமின்றி,இன்று அனைத்து சிவாயலங்களிலும் நடராஜ பெருமானுக்கு சித்திரை திருவோணம் திருநீராட்டல் நடைபெறும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close