தினம் ஒரு ஆன்மீக சிந்தனை: நவகிரகங்களை எந்த எண்ணிக்கையில் சுற்றுவது?

  கோமதி   | Last Modified : 09 May, 2018 04:01 pm


இந்த உலகத்தினை இயங்கச் செய்வது நவகோள்கள் தான்.ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக நவகிரக தலங்களுக்கு சென்று வழிபடவும்,கோவில்களில் விளக்கு ஏற்றவும் சொல்வார்கள். ஆனால் எந்த கிரகத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும் என்பதில் நிறைய பேருக்கு குழப்பங்கள் உண்டு. எந்த கிரகத்தை எத்தனை முறை சுற்றினால் பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

கோள்களின் நாயகரான  சூரிய பகவனை 10 சுற்றுகள் சுற்ற வேண்டும்.

சந்திர பகவானை 11 சுற்றுகளும், செவ்வாய் பகவானை 9 சுற்றுகளும் சுற்ற வேண்டும்.

புத பகவானை   5, 12, 23 சுற்றுகள் சுற்றலாம்.

வியாழ பகவானை 3, 12, 21 சுற்றுகள் சுற்றுவதால் பலன் அதிகம்.

சுக்கிர பகவானை 6 சுற்றுகள் சுற்ற வேண்டும்.

சனி பகவானை  8 சுற்றுகள் சுற்றுவதால் அவரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

ராகு பகவானை  4 சுற்றுகளும், கேது  பகவானை 9 சுற்றுகளும் சுற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close