தினம் ஒரு ஆன்மீக செய்தி - பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

  கோமதி   | Last Modified : 18 May, 2018 03:15 pm


எத்தனையோ ஜீவராசிகள் இருந்தாலும் இந்துக்களால் பசுக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் சிறப்பும்வேறு எந்த உயிரினத்திற்கும்  இல்லை. காரணம் பசுவின் உடம்பில் ஒவ்வொரு அங்கங்களிலும் ஒவ்வொரு தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். 

குறிப்பாக பசுவிற்கு அகத்திக்கீரை, மற்றும் வாழைப்பழம்  கொடுத்து வழிபட்டால் அறிந்தும் அறியாமலும் செய்த நம் பாவங்கள்  தீரும் என்பது நம்பிக்கை. மேலும் வீட்டில் ஏற்படும் குழப்பங்கள், திருமணத்தடை,குழந்தையின்மை ஆகியனவும் இதனால் தீர்க்கப்படுகிறது வெள்ளிக்கிழமைகளில் இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.

"ஸர்வ காம துகே தேவி

ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி

பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே

தேவி துப்யம் நமோஸ்துதே!'

பொருள்:

எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close