தினம் ஒரு ஆன்மீக செய்தி: கோவில் பிரசாதம் மட்டுமே சாப்பிடும் முதலை!

  கோமதி   | Last Modified : 21 May, 2018 03:30 pm


ஒவ்வொரு கோவில்களுக்கும் என்று ஏதாவது ஒரு தனி சிறப்பு  ஒன்று இருக்கும். அந்த தனித்துவமே அந்த கோவில், மக்களிடையே பிரசித்திப் பெற காரணமாக அமைவதும் உண்டு. அந்த வகையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோயிலும் பிரசித்திப் பெற்ற ஒன்று. 

இங்குள்ள கோவில் குளத்தில் பபியா என்றொரு முதலை உள்ளது. இதை  கோயில் காப்பான் என்றே மக்கள் கருதுகிறார்கள். இதில் என்ன விசேஷம் என்றால், பொதுவாக முதலை இனமானது அசைவ வகையை சார்ந்தது. ஆனால் இந்த முதலையோ குளத்தில் உள்ள மீன்களைக்கூட சாப்பிடாது.

இந்த முதலைக்கு கோயில் குருக்கள், உச்சிக்கால பூஜையின் போது சாதம் வெல்லம் கலந்த உருண்டைகளை சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு முசலி நைவேத்யா என்கிறார்கள். விருப்பப்படும் பக்தர்களும் பணம் செலுத்தி உருண்டைகளை வாங்கித் தங்கள் கையால் நைவேத்யம் செய்யலாம்.

கோவில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் குருக்கள்களை இது வரை பபியா தாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close