தினம் ஒரு ஆன்மீக செய்தி: குலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது?

  கோமதி   | Last Modified : 22 May, 2018 03:13 pmஒருவர் குடும்பத்தில்,பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வமே குலதெய்வமாகும். குலத்தைக் காக்கும் தெய்வமாதலால், வீட்டில் நடக்கும் எல்லா  பூஜைகளுக்கும் குலதெய்வத்திற்கே முதலிடம் கொடுப்பது நமது வழக்கம்.

சிலருக்கு வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருக்கும். காரணத்தை ஆராய்ந்துப் பார்த்தால், அவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை சரி வர செய்யாதவர்களாக இருப்பார்கள். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் சேர்த்துப் பெற்று தர வல்லது இந்த குலதெய்வ வழிபாடு. இவ்வளவு ஏன் எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும் என்ற கருத்தில் இருந்து, குலதெய்வ வழிபாட்டின் சிறப்பினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் அதிகமாக கர்மவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. அத்தகையவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை தங்களுக்கு காட்டிருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் வைக்கக்கூடாது.

இவ்வாறு உடல் மற்றும் மன சுத்தியுடன், 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். விரதம் மேற்கொள்ளும் இந்த 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக புலனடக்கம் தேவை.

இப்படி செய்வதால் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி யார் மூலமாகவோ அல்லது கனவிலோ அறிய வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை  இன்றும் நிலவுகிறது. இந்த வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்ய வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.