உதவி என்றால் இப்படி இருக்க வேண்டும்

  கோமதி   | Last Modified : 22 May, 2018 06:31 pm


நண்பகல் பொழுது,முதியவர் ஒருவர் வெகு நாட்களாக உண்ணாமல் இருந்த காரணத்தினால் நடக்க முடியாமல் நடந்து சென்றுக் கொண்டிருக்கிறார். உதவிக்கு யாராவது வர மாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கையில்,எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனை வழிமறித்து,தனக்கு உண்ண ஏதாவது தர முடியுமா என்று கேட்கிறார். உணர்வு தப்பிப் போகும் நிலையில் இருந்தார் அந்த முதியவர். துரியோதனன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவு உண்டு செல்ல சொல்லிவிட்டு தனது பயணத்தை தொடர்கிறான். ஆனால் முதியவருக்கோ எழுந்து நடக்க முடியாத நிலை.

துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் வேறு ஒரு ரதம் வருகிறது. முதியவர் தட்டுதடுமாறி எழுந்து,தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை அவர் சொல்லாமலேயே அறிந்துக் கொள்கிறான். தன் ரதத்தில்,அலங்காரமாக தொங்கிய சில கனிகளையும், இளநீரையும்,முதியவருக்கு புகட்டுகிறான். 

முதியவர் களைப்பு நீங்கப் பெற்றவராய், “ நீங்கள் கர்ணன் தானே” என வினவுகிறார்.கர்ணன் தலை அசைத்த படியே நீங்கள் மெதுவாக உணவு விடுதிக்கு சென்று உணவருந்தி செல்லுங்கள் என கூறுகிறான். பெயருக்கு மட்டும்  வள்ளல் இல்லை. குணத்திலும் அவன் வள்ளல் என்பதை உலகிற்கு உணர்த்திய சம்பவம் இது. உதவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டுமா ?. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close