சனி தோஷம் விலக இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்

  கோமதி   | Last Modified : 05 Jun, 2018 06:08 pm
it-is-necessary-to-read-this-to-escape-from-sani-dosham

நவக்கிரகங்கள் நமது அன்றாட வாழ்வில் எராளமான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஏழரைச் சனி கால கட்டத்திலும், சனி தோஷங்கள் உள்ள காலங்களில் மனிதர்கள் அடையும் துயரங்கள் ஏராளம். நம்முடைய தர்ம சாஸ்திரம் பெரும்பாலான ஜாதக தோஷங்களுக்கு நிவாரணங்களைக் கொடுத்து வழி காட்டியுள்ளது.

அப்படி வழிகாட்டியதில்  முக்கியமானது சனி பகவானால் ஏற்படும் சிரமங்களில் நம்மை காத்துக்கொள்ள அவசியம் படிக்க வேண்டியது நளன் – தமயந்தி கதை

இந்த கதையை நம்பிக்கையுடன் படித்தால்  தோஷம் விலகும்.

சனி தோஷம் நீக்கும் நளன் தமயந்தி கதை இது தான்.

ஆகுகன், ஆகுகி ஆகிய வேடுவ  தம்பதியர் அடர்ந்த காட்டில் குகையில்  வசித்தனர். அந்த வழியில்  வந்த துறவி ஒருவரை வேடுவ தம்பதியினர் சிறப்பாக உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார்.

குகையின் வெளியே அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது.  இதை அறிந்த நொடிப்பொழுதில்  ஆகுகியும் உயிர் துறந்தாள்.இப்படி ஓருயிரும் இரு உடலுமாக வாழ்ந்த சுயநலமில்லாத தம்பதியினரே  மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர்.

துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது.

நளனின் வீரதீர பிரதாபங்களை விவரித்த அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி பார்க்காமலேயே நளன் மீது காதல் கொண்டாள்.

இதற்கிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட பல தேவர்கள்  தமயந்தியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். இதனால் தமயந்தியின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். நளன் மீது தமயந்தி கொண்டிருந்த காதலை அறிந்ததால் அனைவருமே  நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். எத்தனை பேர் வேடமிட்டு வந்தாலும் நிஜ நளனுக்கே மாலையிட்டாள் தமயந்தி. நளன் தமயந்தி தம்பதியினருக்கு  இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.

தமயந்தியை அடைய  முடியாத தேவர்கள், கடும் கோபத்தில் ஆத்திரத்தில் , நளனைப் பிடித்துக் கொள்ளும் படி சனி பகவானிடம் வேண்டினார்கள். கடமை உணர்வு மிக்கவர்களை , தனது வேலைகளை செவ்வனே செய்பவர்களை  சனீஸ்வரர் ஒரு நாளும் ஏதும் செய்ய மாட்டார். ஆனால் கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார்.

நள மகராஜன் நாட்டில்  நல்லாட்சி செய்தான். மக்கள் மகிழ்சியாக இருந்தனர். இந்த சூழ்நிலையில் நள மகாராஜா சனீஸ்வரன்  பிடிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, நளன் தனது  கால்களை சரியாக கழுவாமல் பூஜையை ஆரம்பித்தான். இதற்காகவே காத்திருந்ததைப் போல “அடிப்படையில் சரியான முறையில் பூஜைக்கு  கூட தன்னை தயார் செய்துகொள்ளாத  மன்னன் ஒரு நாட்டை எப்படி ஆளமுடியும்?” என சொல்லி  சனி, பகவான் அவனைப் பிடித்து விட்டார்.

சனி பிடித்த நளன், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.


பின்னர் மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அந்த பாம்பு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. எல்லாம்  இழந்த நிலையில் நளன், அயோத்தி மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது, நளனைப் பிடித்திருந்த ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

எவன் ஒருவன் தனது கடமைகளை தவறாது செய்கிறானோ அவனுக்கு சனி பகவான் இன்னல்கள் தருவதில்லை, இதற்கு சாட்சியே நள தமயந்தியின் கதை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close