சிந்திக்க ஒரு ஆன்மீக கதை - யார் உண்மையான வள்ளல்

  கோமதி   | Last Modified : 09 Jun, 2018 06:40 am
a-spiritual-story-to-think-who-is-the-true-philanthropist

அர்ஜுனனுக்கு எப்போதும் தன்னுடைய வில் வித்தையின் மேல் ஒரு கர்வம் உண்டு. அதே போல் கர்ணனின் மேலும் தீராத ஒரு கோபம் இருந்தது. அவனுக்குள் பல நாட்களாய் ஒரு சந்தேகம். எல்லோரும் கர்ணனை பெரும் வள்ளலாய் கொண்டாடுகிறார்களே, உண்மையில் நம்மை விட கர்ணன் பெரும் வள்ளல் தானா என்பது தான் அது. இந்தக் கருத்தை தன் நண்பனான  கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். “கிருஷ்ணா, எல்லோரும் ஏன் கர்ணனை மட்டும் இப்படி வள்ளலாய் கொண்டாடுகிறார்கள். நான் எதில் குறைந்து போனேன்? என்னை அப்படி யாரும் சொல்லவில்லையே” என வருந்தினான். அந்த மாயக் கண்ணனும் தனக்கே உரித்தான தனி புன்னகையோடு, “நாளை உங்கள் இருவரில் யார் வள்ளல் என்பதைநான் நிருபிக்கிறேன்” என்று புறப்பட்டான்.

அடுத்த நாள் உதயத்தில் கண்ணன் தனது சக்தியால் இரண்டு தங்க மலைகளை உருவாக்கி கர்ணனையும் அர்ஜுனனையும் அழைத்து, “இவை உங்கள் சொத்து, இந்த நாளின் முடிவில் இருவரும் உங்களுக்கு அளிக்கப்பட்ட தங்க மலைகளை தானம் செய்ய வேண்டும்” என சொல்லி புறப்படுகிறான்.

அர்ஜுனன் தன்னை தான், எல்லோரும் வள்ளல் என்று புகழ வேண்டும் என்ற நோக்கத்தில், காரியத்தில் கண்ணானான். வருகின்ற அனைவருக்கும் தங்க மலைகளை வெட்டி வெட்டி அளித்தபடியிருந்தான். அந்த நாளும் முடிவுக்கு வருகிறது. அர்ஜுனனுக்கு பெருமை பிடிபடவில்லை. அந்த மலையில் குடைந்து நிறைய தங்கத்தை வெட்டி தந்திருந்தான். கர்ணன் ஒருபோதும் இவ்வளவு மலையை தானமாக தந்திருக்க முடியாது என்று நம்பினான். அர்ஜுனன் நிறைய பெருமிதத்தோடு, தான் அன்று தானம் செய்த மலை பகுதியை சுட்டி காண்பித்தான். ஆனால் கிருஷ்ணன், கர்ணன் வென்று விட்டதாக  குறிப்பிட்டதை அர்ஜுனனால் நம்பமுடியவில்லை .

கர்ணன் எவ்வாறு தானமளித்தான் என்பதை அறிய அவனுள் ஆவல் எழுந்தது. கிருஷ்ணன் அதித புன்னகையோடு பதில் சொன்னான். “இன்று காலை உன்னை போல் கர்ணனுக்கு ஒரு மலையை கொடுத்தேன். அவனிடம் ஒரு மனிதன் யாசித்து வந்தான். கர்ணனும் அந்த மலையை சுட்டி காட்டி இந்த மலையை வைத்துக்கொள் என தன் வழியே அடுத்த காரியத்துக்கு புறப்பட்டு விட்டான். கர்ணனின் தான நிகழ்வு காலையிலேயே முடிவுக்கு வந்து விட்டது”என்று சொன்னான். அதன் பின் அர்ஜுனனுக்கு பேச்சு எழவில்லை.தனது தோல்வியை ஒப்புக்கொண்டான். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close