எதிரிகள் உருத்தெரியாமல் போக வணங்க வேண்டிய தெய்வம் எது தெரியுமா?

  கோமதி   | Last Modified : 26 Jun, 2018 06:48 pm

worship-this-god-to-overcome-the-enemies

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில்  திருக்கோயில்கள் கொண்ட மாவட்டம் தஞ்சாவூர். அதிலும் நவக்கிரக தலங்களுக்கு மையமாக முக்கிய கேந்திரமாக விளங்குகிறது  கும்பகோணம். கோயில் நகரமான அருகில்  உள்ள  திருபுவனத்தில் சரபேஸ்வரர்,  ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற பெயரில் பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார். 

திருபுவனத் திருத்தலத்தில்  அருள் பாலிக்கும்  ஸ்ரீ கம்பஹேஸ்வரர்  தன்னை நாடிவந்து வணங்கிடும் பக்தர்களை  பீடித்துள்ள மன நோய் , தீராத நாட்பட்ட வியாதிகளை போக்கி வருகிறார்.மேலும் பக்தர்களின் ஊழ்வினை போக்கி அவர்களது தலைவிதியை சிறப்பாக மாற்றி அமைக்கிறார் இங்கு  குடிக் கொண்டிருக்கும்  ஸ்ரீ கம்பஹேஸ்வரர்.

13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன் குலோத்துங்கனால், ஸ்ரீகம்பஹரேஸ்வரர் திருக்கோயிலின்  கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் அந்தப் பகுதியை ஆண்ட ,சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களால் இத்திருக்கோயில்  கட்டி முடிக்கப்பட்டது. சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக் கோயில் இதுவாக இருக்கக்கூடும் என்கிறார்கள்  வரலாற்று அறிஞர்கள்.

இந்த திருக்கோயிலின்  முன்பகுதியானது 120 அடி உயரமுள்ள ஓரு ரதத்தினை போல அமைந்துள்ளது . ரதத்தின் சுவர்கள் மற்றும் கோயில்கள் சுவர்களில் ராமாயணத்தில் வரும் காட்சிகள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள கோயிலின் அழகையும், கற்களில் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகளையும், ஒவியங்களின் வனப்பும்  பக்தர்களை   பரவசப்படுத்துகின்றது.

ஸ்ரீ சரபேஸ்வரர் - நமது தலைவிதியையை மாற்றுவார் 

ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவதால் எதிரிகள், உதிரிகளாகி உருத்தெரியாமல் அழிந்து போவார்கள். சரபேஸ்வரரை வழிபடும் பக்தர்களின்   நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள். 

பரபர வேகத்தில் பல பாவச் செயல்களை  செய்து  வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு தவிக்கும் பலரும் ஸ்ரீசரபேஸ்வரர்  பாதம் பணிந்து  வணங்கிட அவர்கள் தலை எழுத்தை மாற்றுகிறார் ஸ்ரீ சரபேஸ்வரர் . இவரை வேதங்கள் அழிக்கும் கடவுளான அக்கினி தத்துவத்துக்கு உரியவராகக் குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய துன்பங்களை தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு நல்வாழ்வை அமைத்துத் தருகிறார் சரபேஸ்வரர்.

நமக்கு எவ்விதமான இடர்களும் , நோய் நொடிகளும் வராதவாறு தனது சக்தி பாதுகாப்பு வளையத்துகுள் வைத்து பாதுகாத்து வருகிறார்  சரபேஸ்வரர்.

மனமுருகி ஸ்ரீசரபேஸ்வரரை சரணடைய  சிக்கல்கள்  முற்றிலும் நம்மை விட்டு நீங்கும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.