• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

ஆன்மீக கதை - உண்மையான ஞானி எப்படி இருக்க வேண்டும்?

  கோமதி   | Last Modified : 30 Jun, 2018 07:34 pm

spiritual-story-how-to-be-a-true-sage

திரிகால ஞானியான நாரதர், ஒரு முறை  காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார். நாரதரும் அவன் தவத்தினை  கலைக்க விரும்பாமல் அவனைக் கடந்து செல்ல நினைக்கையில், "தேவரிஷியே... எங்கு செல்கிறீர்கள்? என்று கேட்டான் அந்த தவ சீலன். 

"சிறிது நேரம் பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்"! என்றார் நாரதர். 

"அப்படியானால், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். கடவுள் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று மறக்காமல் கேட்டு வாருங்கள்" என வேண்டினான். நாரதரும்  அதை ஏற்றுக் கொண்டார். 

அவனைக் கடந்து மற்றோரிடம்  சென்ற நாரதர் அங்கே ஒருவன் ஆடிப்பாடிக் கொண்டிருப்பதைக் கண்டார் . நாரதரைக் கண்டதும், "நாரதரே, எங்கே போகிறீர்கள்?"என்றான். அவனது பேச்சில் ஒருவித அதிகாரமும் இறுமாப்பும் தொனித்தன. 

நாரதர், சொர்க்கத்துக்கு! என்றார். 

"அப்படியானால், நான் எப்போது முக்தி அடைவேன் என்று கடவுளிடம் கேட்டு வாருங்கள்!" என்றான். 

சரி! என்ற நாரதர், சொர்க்கம் சென்றார். 

மறுபடியும் பூவுலகத்துக்கு வந்த நாரதர். கடந்த முறை, பார்த்த தவசீலரை சந்தித்தார். நாரதரின் வருகையை உணர்ந்த அந்த தவசீலர் கண் விழித்தார். மிகவும் சந்தோஷப்பட்ட அவர் ஆவலுடன், "சுவாமி... என்னைப் பற்றி கட வுளிடம் கேட்டு வந்தீர்களா?" என்றார். 

நாரதர் புன்சிரிப்புடன், "ஆமாம், தவசியே... நீ இன்னும் நான்கு தடவை பூமியில் பிறந்த பிறகுதான் உனக்கு முக்தி என்று கடவுள் கூறிவிட்டார்"! என் றார். உடனே, தவசீலர் அழத் துவங்கினார். 

"இதற்காக ஏன் அழுகிறாய்?" என்றார் நாரதர். 

"சுவாமி... நான் இவ்வளவு கடுமையாக விடா முயற்சியுடன் கடுந்தவம் செய்தும் கடவுள் இன்னும் மனம் இரங்கவில்லை. இந்த நிலையில் நான் மேலும் நான்கு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டாரே! அப்படியானால், நான் பெரும் பாவியல்லவா? அதை நினைத்துதான் அழுதேன்!"என்றான். 

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். திரும்பவும் ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், "என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா?"என்றான். 

நாரதரும்,"கேட்டேன்... கேட்டேன்" என்றார். 

என்ன சொன்னார்?என்றான் ஆவலுடன்.

நாரதர் அமைதியாக, "அதோ! அந்த புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை பிறவிகள் உனக்கு இன்னும் உள்ளன. எனவே, அதன் பிறகுதான் முக்தி என்று கடவுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்" என்றார் நாரதர். 

"ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். எனக்கு இவ்வளவு விரைவில் முக்தியா? என்னால் நம்ப முடியவில்லையே" என்றபடி ஆடிப்பாடினான் அவன். இதைக் கண்ட நாரதர் திகைத்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. 

அன்பு மகனே, நான் உனக்கு இக்கணமே முக்தி தந்தேன்! என்றது. அவனும்  முக்தியடைந்தான். 

இதை பார்த்துக் கொண்டிருந்த நாரதர் அசரீரியிடம் கேட்டார்,"உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?" 

விருப்பு,வெறுப்பு அற்றவன் தான் உண்மையான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவபுண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர். 

அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற்காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கினேன் என்றது அசரீரி. 

இந்த பதிலைக் கேட்ட நாரதர் தன் ஐயம் தெளிந்து தனது பயணத்தை தொடர்ந்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.