ஆயுளோடு... ஆரோக்கியமும் வேண்டுமா ?- வேளச்சேரி வாருங்கள்

  கோமதி   | Last Modified : 04 Jul, 2018 01:41 pm
life-do-you-want-health-welcome-to-velachery

மார்க்கண்டேயனின் ஆயுளை எடுப்பதற்காக வந்த எமதருமனை சிவபெருமான் எட்டி உதைத்தார். எமனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற பூலோகத்தில் சிவத்தலங்களுக்குச் சென்று தரிசித்தான் எமன். ஓரிடத்தில் தீர்த்தம் உருவாக்கி, அங்கே சிவலிங்க பூஜை செய்து, தவமிருந்தான். அவனுக்குத் தரிசனம் தந்த சிவனார், தண்டத்தையும் வழங்கி அருளி, இழந்த பதவியை தந்தார். இதனால் சிவபெருமானுக்கு தண்டீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. 

சென்னை கிண்டிக்கு அருகில் உள்ள வேளச்சேரியில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதண்டீஸ்வரர். இவரை வணங்கினால், இழந்த பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். 

வேதங்கள் வழிபட்ட தலம். எனவே இது வேதச்சேரி என அழைக்கப்பட்டு, பிறகு வேளச்சேரி என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். 
இங்கு வீரபத்திரருக்கு சந்நிதி உள்ளது சிறப்பு. பொதுவாக, நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர், இங்கே அமர்ந்த நிலையில் காட்சி தந்து அருள்கிறார். தை மாதப் பிறப்பில், சூரியனார் தன் கதிர்களால் சிவலிங்கத்தைத் தழுவி வணங்குவதும் விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள். 

வேளச்சேரி தண்டீஸ்வரரை வணங்குங்கள். ஆயுளும் தருவார்.... ஆரோக்கியமும் அருள்வார்! 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close