பித்ருதோஷம் நீக்கும் நவக்கிரகங்கள்

  கோமதி   | Last Modified : 06 Jul, 2018 10:49 am

navagrahas-removes-pithuruthosham

விஸ்வநாதரை வணங்க காசிக்கு செல்ல முடியாதவர்கள் ,திருச்சி - கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வரலாம். இங்குள்ள  நவக்கிரகங்களை வழிபட்டால் பித்ருதோஷம் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இக்கோயிலில் 9 நவக்கிரகங்களும் தம் தேவியருடன் காட்சி தருவது  தனி சிறப்பு. 

ஒருவருக்கு ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குமானால்,அவர்களுக்கு  வேலை கிடைப்பதில் தாமதம்,திருமண தடை,குழந்தை பெறுவதில் தாமதம் கணவன்-மணைவிக்கிடையே பிரச்சனை  , மனதில்  அமைதியின்மை   போன்ற பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும். தோஷங்களில் மிகவும் பிரதானமானது பித்ரு தோஷம். பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யவில்லை என்றால் பித்ருதோஷம் ஏற்படுகிறது.

திருச்சி - கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த காசி விஸ்வநாதர் கோயில் பித்ருதோஷ பரிகார ஸ்தலமாக  பிரசித்தி பெற்று விளங்குகிறது.  நாகம நாயக்கர் என்பவர் பித்ருதோஷம் நீங்க காவிரிக்கரையில் காசி விஸ்வநாதர் - ஸ்ரீவிசாலாட்சிக்கு கோயில் கட்டினார்.

அனைத்து தோஷங்களும் நீங்க தேவியருடன் நவக்கிரஹங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பலனடைந்தார். ஆலமரங்கள் நிறைந்த  இப்பகுதியில், அதன் பழங்கள் அதிகம் கீழே விழுந்து  காணப்பட்டதால்,பழம் ஊர் என பெயர் ஆனது. பின்னர் அதுவே நாளடைவில்  மருவி பழுவூர் ஆனது. இப்போது பழூர் எனப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள நவக்கிரஹங்கள் தங்களை நாடி வருபவர்களின்  பித்ருதோஷம் நீங்க அருளாசி புரிகின்றனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.