ஒப்பிலியப்பன் கோயிலில் உத்ஸவ விழாக்கள்

  கோமதி   | Last Modified : 06 Jul, 2018 06:17 pm
udasava-festivals-in-the-opaliyappan-temple

 

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஒப்பற்ற திருத்தலம் ஒப்பிலியப்பன் திருக்கோயில். மிகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் பெருமாள், கொள்ளை அழகு. 
இவரின் சந்நிதியில் வந்து நின்றாலே, பெருமாள் நம்மையும் நம் வம்சத்தையும் வாழச் செய்து அருளுவார் என்கிறார்கள் ஆன்மீக பெருமக்கள்.
 புராணப் பெருமை கொண்ட ஒப்பிலியப்பன் கோயிலில் எப்போதும் விழாக்கள்தான். விசேஷங்கள்தான்! 

அந்த விழாக்கள் இவை...! 

வைகாசி: திருவோணம் - வசந்த உற்சவம். சாத்துமுறை சேஷ வாகனம் (அனுஷ நட்சத்திரம் தொடங்கி 6-நாள் திரு நந்தவனம் வசந்த மண்டபத்தில் உற்சவம்).

ஆடி: ஜேஷ்டாபிஷேகம் (4 நாள்) மூலவர், உற்சவர் கவசம் களைந்து திருமஞ்சனம். 4-ஆம் நாள் மாலை தொட்டித் திருமஞ்சனம்.

ஆவணி: திருவோணம்- பவித்ர உற்சவம். சாத்துமுறை சூரியோதய கருட சேவை (கேட்டை நட்சத்திரம் தொடங்கி 5 நாள் உற்சவம்).

புரட்டாசி: திருவோணம் - பிரம்மோற்சவம். சாத்துமுறை கோ ரதம் (சித்திரை நட்சத்திரம் தொடங்கி 9 நாள் உற்சவம் மற்றும் ஸ்ரீதேசிகன் அவதார உற்சவம்).

ஐப்பசி: திருவோணம்- திருக்கல்யாண உற்சவம் (12-நாள் உற்சவம்).

மார்கழி: பகல்பத்து 10-நாள், ராப்பத்து 10-நாள், இயற்பா சாத்துமுறை- 1 நாள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம் சாத்து முறை-1 நாள் (மொத்தம் 22-நாள்).
 

தை: திருவோணம்- தெப்போற்சவம். சாத்துமுறை - (கேட்டை நட்சத்திரம் தொடங்கி 5 நாள் உற்சவம்).
பங்குனி: திருவோணம்- பிரம்மோற்சவம் சாத்துமுறை (அவதார மகோற்சவம்) மற்றும் திருத்தேர் (சித்திரை நட்சத்திரம் தொடங்கி 9நாள் உற்சவம்).
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close