மகத்துவமான அரச மரமும் ... நிறம் மாறும் அற்புதத் தீர்த்தமும்

  கோமதி   | Last Modified : 08 Jul, 2018 02:23 am
the-grand-royal-tree-the-color-changing-miracle-temple-pond

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அற்புதமான திருத்தலம் திருப்புல்லாணி. இங்கு, அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயிலில், இரண்டாம் பிராகாரத்தில், தாயார் சந்நிதிக்கு அருகில் ஓர் அரச மரம் இருக்கிறது. மகத்துவமான விருட்சம் இது!

படைப்புத் தொழில் புரியும் பிரம்மதேவன், தெற்கு திசையில் கோடி சூரியப் பிரகாசம் கொண்ட பிரமாண்டமான ஒளி தோன்றி மறைவதைக் கண்டார். ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் சென்று, அந்த ஒளியைப் பற்றிக் கேட்டார். அவரிடம்,அது ஒரு அரச மரம். அந்த மரத்தில்தான் ஸ்ரீஜெகநாதர் நித்திய வாசம் செய்கிறார் என்று அருளினாராம் ஸ்ரீமகாவிஷ்ணு.

இந்த திருத்தலத்தில்  ஸ்ரீஜெகநாதர் வாசம் செய்த அரச மரத்துக்கும் அபிஷேகம் நடக்கிறது. அரச மரத்தடியில் இருக்கும் மண்ணையும், உலர்ந்த பட்டையையும் எடுத்துச் சென்று அருகில் இருக்கும் சக்கர தீர்த்தம் என்ற திருக்குளத்து நீரில் குழைக்கின்றனர். அதை நெற்றியில் பூசிக்கொள்கின்றனர்.

 குளத்தின் நீரை அருந்திவிட்டு, அரச மரத்தை வலம் வந்து வணங்கி வழிபட்டால் நோய்கள் நீங்குகிறது என்பது நம்பிக்கை . சக்கர தீர்த்தத்தின் நீர் அடிக்கடி நிறம் மாறும் என்பதாக ஐதீகம். அதற்கேற்ப நாட்டின் நடப்பு அமையும் என்பது நம்பிக்கை.

நீர் தெளிவாக இருந்தால் தேசத்துக்கு நன்மை என்றும் பொன்னிறமாக மாறினால் விளைச்சல் குறையும் என்றும் பாசி படர்ந்தால் கால்நடைகள் நாசம் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம்!

இராமேஸ்வர தல யாத்திரை செல்பவர்கள் திருப்புல்லாணிக்கும் சென்று ஆதி ஜெகநாதப் பெருமாள் அருள் பெறுவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close