பரிகாரங்களும் நம்பிக்கைகளும் - கண் நோய் தீர்ப்பாள் மயிலை தாமரைக்கண்ணி

  கோமதி   | Last Modified : 13 Jul, 2018 06:58 am
remedies-and-beliefs-ophthalmic-disease-remedy


கண்ணில் ஏதேனும் பிரச்சினை என்றால், கோளாறு என்றால், மயிலாப்பூரில் குடிகொண்டிருக்கும் தாமரைக் கண் நாயகியைத் தரிசித்து வேண்டினால் போதும். விரைவில் கண்ணுக்கு ஒளியாவாள். வாழ்க்கைக்கு வழியாவாள் என்கின்றனர் பக்தர்கள். தாமரைக்கண் நாயகி வேறு யாருமில்லை... முண்டகக்கண்ணிதான் அவள்! 

மயிலாப்பூர் லஸ் கார்னருக்கு அருகில் அமைந்து உள்ளது ஸ்ரீமுண்டகக்கண்ணியம்மன் ஆலயம். அந்தக் காலத்தில் இங்கு தாமரைக் குளம் இருந்ததாகவும் அதன் கரையில் உள்ள ஆலமரத்தடியில் சுயம்புவாகத் தோன்றினாள் அம்மன் என்றும் அதனால், அம்மனுக்கு முண்டகக்கண்ணியம்மன் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது ஸ்தல வரலாறு. முண்டகம் என்றால் தாமரை என்று அர்த்தம்! 
 

ஐப்பசியில் சிவனாருக்கு அன்னாபிஷேகம் நடப்பது போல், இங்கு அம்மனுக்கும் அன்னாபிஷேகம் நடைபெறுவது சிறப்பு. அம்மை நோய் வந்தால், இங்கு வேண்டிக்கொண்டால் விரைவில் நிவாரணம் பெறலாம். கல்யாணத் தடையும் அகலும். கண்களில் கோளாறு அல்லது நோய் இருப்பவர்கள், அம்மனுக்கு விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், கண் நோய் நீங்கும். பார்வைக்குறைபாடு அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை! 
  
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close